ADVERTISEMENT

UAE: இன்று களப்பயிற்சியை மேற்கொள்ளவிருக்கும் ஷார்ஜா காவல்துறை..!! புகைப்படம் எடுக்க வேண்டாம் என குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்..!!

Published: 1 Mar 2023, 6:41 PM |
Updated: 2 Mar 2023, 7:32 AM |
Posted By: admin

ஷார்ஜா காவல்துறையானது இன்று (மார்ச் 2) ஷார்ஜாவில் இருக்கக்கூடிய கொர்ஃபக்கானில் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஷேக் கலீத் அல் காசிமி சாலையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இதன் காரணமாக அந்த பகுதியில் ராணுவ வாகனங்களின் இயக்கம் அதிகமாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொர்ஃபக்கான் இலக்கியப் பேரவை (Khorfakkan Literary Council) ரவுண்டானாவில் இருந்து போக்குவரத்து விளக்கு சந்திப்பு (traffic light intersection) வரை இரு திசைகளிலும் சாலை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில்  புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும், பயிற்சி மையத்தை விட்டு வெளியேறுமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கு காவல்துறையினருக்கு வழிவிடுமாறும் குடியிருப்பாளர்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.