ADVERTISEMENT

UAE: குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு கிடங்கில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!!

Published: 12 Mar 2023, 4:03 PM |
Updated: 12 Mar 2023, 4:31 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் உள்ள ஒரு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் இருக்கக்கூடிய உலோகக் கருவிகள் நிரம்பிய கிடங்கு ஒன்றில் தீப்பிடித்ததன் காரணமாக அந்த கிடங்கில் உள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஷார்ஜா சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உலோகக் கருவிகளின் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு காலை 10.42 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களைத் தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்கள் உடனடியாக பதிலளித்து 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வநதுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் போது காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய சம்பவ இடத்தில் விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருவதாகவும் தீயணைத்ததற்கு பிறகு தற்பொழுது குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT