ADVERTISEMENT

UAE: தெரியாத எண்களில் இருந்து Message வந்தால் பதிலளிக்க வேண்டாம்.. குடியிருப்பாளர்களை எச்சரித்த துபாய் காவல்துறை..!!

Published: 12 Mar 2023, 5:15 PM |
Updated: 12 Mar 2023, 5:48 PM |
Posted By: admin

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் சந்தேகத்திற்குரிய மெசேஜை எப்போதாவது பெற்றால், அத்தகைய செய்திக்கு பதிலளிக்கவோ அல்லது மறுபதிவு செய்யவோ வேண்டாம் என அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய மெசேஜை பெற்றால் அதற்கு பதிலாக அதிகாரிகளுக்கு உடனடியாக புகாரளிக்கவும், துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றும் அதிகாரிகளால் பகிரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் ”பெயர் தெரியாத நபரிடம் இருந்து பெறப்படும் செய்திக்கு பதில் அளிக்க வேண்டாம். அத்தகைய செய்திகளை அனுப்பியவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வேண்டாம். அத்துடன் அத்தகைய செய்திகளை மறுபதிவு செய்யவோ, பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம். அதற்கு பதிலாக துபாய் காவல்துறையின் இ-கிரைமைத் தொடர்புகொண்டு அந்த செய்திகளைப் புகாரளிக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போலவே இந்த ஆண்டு ஜனவரியில், நூற்றுக்கணக்கான அமீரக குடியிருப்பாளர்கள் தெரியாத நபர்களிடம் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் WhatsApp செய்திகளை பெற்றதாகவும் மேலும் அவர்கள் அந்த எண்களை எத்தனை முறை தடுத்தாலும், அவர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாகவும், அதிகாரிகள் கடும் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இந்தச் செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மேலும் துபாய் காவல்துறையின் இலவச எண்ணான 901ஐ (அவசரமற்ற சமயங்களுக்கு) மின்னஞ்சல் mail@dubaipolice.gov.ae அல்லது புகாரை பதிவு செய்ய துபாய் போலீஸ் இணையதளம் அல்லது அப்ளிகேஷனை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT