ADVERTISEMENT

ஃபேமிலிக்கான 5 ஆண்டு மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசா அப்ளை செய்வதை எளிதாக்கிய ICP.. தனித்தனி விண்ணப்பம் இனி தேவையில்லை..!!

Published: 19 Mar 2023, 8:55 PM |
Updated: 19 Mar 2023, 9:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) இப்போது குடும்ப உறுப்பினர்களுக்கான ஐந்து ஆண்டு மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசாக்களை வழங்கும் நடைமுறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது ​​ICP இணையதளம் ஒரு குடும்பம் குழுவாக விண்ணப்பிக்க ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இதனால் விசா நடைமுறைகள் நெறிப்படுத்தப்பட்டு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரக குடியிருப்பாளர் இதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை விசிட்டில் அழைத்து வருவதாக இருந்தால், குடும்ப உறுப்பினர் ​​​​ஒவ்வொருவருக்கும் தனித்தனி விண்ணப்பங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த செயல்முறை இனி இல்லை. ஏனெனில் குடும்பங்கள் குழுவாக வருகை தந்தால் அவர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை தனித்தனியாக அனுப்ப வேண்டியதில்லை என பயண முகவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த டூரிஸ்ட் விசாவானது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளிகள் 90 நாட்களுக்கு மிகாமல் தொடர்ந்து அமீரகத்தில் தங்க இந்த விசா அனுமதிக்கிறது. மேலும் இது ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் நீட்டிக்கப்படலாம். இதனால் இந்த விசாவிற்கு தற்சமயம் அதிக தேவையிருப்பதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து பயண முகவர்கள் கூறுகையில் “இது ICP இன் சேவையாகும் மற்றும் நாட்டில் எந்த ஸ்பான்ஸரும் இதற்கு தேவையில்லை. இருப்பினும், ஏஜென்ட் மூலம் செல்வதை விட, ICP இணையதளத்தில் ஆன்லைனில் விசாவிற்கு தானாக விண்ணப்பிப்பது அவர்களுக்கு நல்லது. ஏனெனில் பயண முகவர்களிடம் இந்த வகையான விசாவிற்கு ஒதுக்கீடு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டு விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஒரு வண்ண புகைப்படம்
  • பாஸ்போர்ட்டின் நகல்
  • செல்லுபடியாகும் மருத்துவ காப்பீடு
  • செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட்
  • முந்தைய ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை 4,000 அமெரிக்க டாலர்ஸ் (தோராயமாக 14,700 திர்ஹம்ஸிற்கு சமம் அல்லது வெளிநாட்டு நாணயங்களில் அதற்கு சமமான வங்கி இருப்பு)
  • தங்குவதற்கான ஹோட்டல் அல்லது குடியிருப்பு முகவரியாக இருக்கக்கூடிய வசிப்பிடத்திற்கான சான்று

ஐந்து ஆண்டு விசாவிற்கு ஆகும் செலவு:

ICP இணையதளத்தின்படி, இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு ஒரு நபருக்கான கட்டணம் 750 திர்ஹம்ஸ் மற்றும் அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக (security deposit) 3,025 திர்ஹம்ஸ்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பரில், துபாயின் சுற்றுலா அமைப்பு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசா நடைமுறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவர அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியது. மேலும் அமீரக அரசால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட விசா சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த புதிய ஐந்து ஆண்டு மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.