ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள சிறு வணிகங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ‘கார்ப்பரேட் வரி நிவாரணம்’..? கேபினட் முடிவு என்ன?

Published: 13 Apr 2023, 8:57 PM |
Updated: 13 Apr 2023, 10:15 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் கார்ப்பரேட் வரியின் கீழ் சிறு மற்றும் குறு வணிகங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஃப்ரீலேன்சர்ஸ்களுக்கான கார்பரேட் வரி குறித்த தகவல்களை அமீரகத்தின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 மில்லியன் திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான வருவாய் கொண்ட வணிகங்கள் “சிறு வணிக நிவாரணம் (Small Business Relief)”எனும் முயற்சியின் கீழ் பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரக அரசனது ஆண்டு ஒன்றுக்கு 3,75,000 திர்ஹம்களுக்கும் அதிகமான லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு அதன் லாபத்தில் ஒன்பது சதவீதம் கார்ப்பரேட் வரியாக விதிக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், அமீரகத்தில் தொழில் புரிந்து வரும் சிறு குறு வணிகங்களுக்கான கார்ப்பரேட் வரி குறித்த விபரங்களை UAE கேபினட் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வரி காலத்திலும் ஒரு நிறுவனத்தின் வருவாய் 3 மில்லியன் திர்ஹம்களுக்குக் குறைவாக இருந்தால், குடியிருப்பாளர்களாக இருக்கும் வரி செலுத்தக்கூடிய நபர்கள் சிறு வணிக நிவாரணத்தைப் பெறலாம். மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கான Dh3 மில்லியன் வருவாய் வரம்பானது, ஜூன் 1, 2023 அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வரிக் காலங்களுக்கும், டிசம்பர் 31, 2026 அன்று முடிவடையும் அடுத்தடுத்த வரிக் காலங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சியின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரி செலுத்தக்கூடிய நபர்கள், குறிப்பிடப்பட்ட வரிக் காலம் மற்றும் அதற்கு முந்தைய வரிக் காலங்களில் அவர்களின் வருவாய் ஒவ்வொரு வரி காலத்திற்கும் 3 மில்லியன் திர்ஹம்களுக்குக் குறைவாக இருந்தால் அவர்கள் சிறு வணிக நிவாரணத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் கேபினட் தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின் படி, சிறு வணிக நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க தேர்ந்தெடுக்கப்படாத வணிகங்கள் தங்களின் வரி செலுத்தக்கூடிய காலங்களில் ஏற்பட்ட வரி இழப்புகள் மற்றும் அனுமதிக்கப்படாத நிகர வட்டி செலவினங்களை, எதிர்கால வரிக் காலங்களில் பயன்படுத்த முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அமைச்சகம் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், வரி விதிக்கப்படும் நபர்கள் தங்கள் வணிகம் அல்லது செயல்பாட்டை செயற்கையாகப் பிரித்து, அவர்களின் மொத்த வருவாய் 3 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் இருந்து, அத்தகைய நபர்கள் சிறு வணிக நிவாரணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், கார்ப்பரேட் வரிச் சட்டத்தின் பொது துஷ்பிரயோகத்திற்கு எதிரான விதிகள் தொடர்பான பிரிவு 50 இன் பிரிவு (1) இன் கீழ் கார்ப்பரேட் வரி நன்மை சட்டத்தின் கீழ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. .

எவ்வாறாயினும், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் மற்றும் 3.15 பில்லியன் திர்ஹம்ஸிற்கு அதிகமான குழு வருவாய்களைக் கொண்ட மல்டி நேஷனல் நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் தகுதியுள்ள ஃபிரீ ஜோன் மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்காது என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.