ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ர்: ஷவ்வால் மாத பிறையை பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த சவூதி..!!

Published: 15 Apr 2023, 9:16 PM |
Updated: 16 Apr 2023, 9:14 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 20 (ரமலான் 29, வியாழன்) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் தங்கள் சாட்சியத்தை அங்கு பதிவு செய்ய அல்லது அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்புகொள்வதற்கு அருகிலுள்ள நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளிலும், பெரும்பாலான அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் புனித ரமலான் மாதம் கடந்த மார்ச் 23 அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த வருடம் ரமலான் மாதத்தின் 29 ம் நாள் ஏப்ரல் 20 வியாழன் அன்று வருகிறது. அன்றைய இரவில் பிறை காணப்பட்டால், ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை, ஈத் முதல் நாளாகும். 

ADVERTISEMENT

ஒருவேளை அன்று பிறை தென்படவில்லை என்றால், ஏப்ரல் 22 சனிக்கிழமை, ஈத் அல் ஃபிதர்ரின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 29 நாட்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.