ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்து வரும் 6 நாள் விடுமுறை.. விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க 60 நாடுகளின் பட்டியல் இதோ..!!

Published: 29 Apr 2023, 9:29 AM |
Updated: 29 Apr 2023, 10:57 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வரும் ஈத் அல் அதாவை (ஹஜ்) முன்னிட்டு அடுத்த நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை அனுபவிக்க உள்ளார்கள். இந்த நீண்ட விடுமுறையானது, வானில் தோன்றும் பிறையைப் பொறுத்து ஜூன் 27 செவ்வாய் முதல் ஜூலை 2 ஞாயிறு வரை ஆறு நாட்களுக்கு விடுமுறை நீடிக்கும் என தெரிகிறது. ஏற்கனவே, இந்த மாதம் ஈத் அல் ஃபிதுர் பண்டிகையில் குடியிருப்பாளர்கள் நான்கு நாள் விடுமுறையை அனுபவித்த நிலையில், அடுத்ததாக ஆறு நாள் விடுமுறை வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமீரகத்தை பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ சேர்ந்து, இதுபோன்ற நீண்ட வார இறுதி விடுமுறையை ஒன்றாக செலவிடுவதற்கு பெரும்பாலான வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நட்பு நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டவர்களே அதிகம். அதிலும் குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்களே இங்கு அதிகம். அதாவது, அமீரகத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 36 சதவிகிதம் பேர் (3.5 மில்லியன் இந்தியர்கள்) இந்தியாவை சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்கிடையில், அமீரகத்தில் வரவிருக்கும் ஆறு நாள் நீண்ட விடுமுறையில் வேறு நாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்பும் குடியிருப்பாளர்கள், பாஸ்போர்ட் தரவரிசையில் 81வது இடத்தில் இருக்கும் நமது இந்திய பாஸ்போர்ட்டின் மூலம், தாய்லாந்து, மாலத்தீவுகள், கத்தார், ஓமன், ஜோர்டான் மற்றும் இலங்கை போன்ற பிரபலமான இடங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள 60 விசா இல்லாத இடங்களுக்கு பயணிக்கலாம்.

அவ்வாறு ஈத் அல் அதா விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலை கீழே காணலாம்.

ADVERTISEMENT

மத்திய கிழக்கு நாடுகள்:

  • கத்தார்
  • ஓமன்
  • ஜோர்டான்
  • ஈரான்

ஆசிய நாடுகள்:

  • பூட்டான்
  • கம்போடியா
  • இந்தோனேசியா
  • கஜகஸ்தான்
  • லாவோஸ் (laos)
  • மக்காவ் (macau)
  • மாலத்தீவுகள்
  • மியான்மர்
  • நேபாளம்
  • இலங்கை

ஐரோப்பா நாடுகள்:

அல்பேனியா (இந்திய குடிமக்களுக்கு அல்பேனியாவிற்கு விசா தேவை. இருப்பினும், 10 வருட கோல்டன் விசாவைக் கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் நாட்டிற்கு செல்லலாம்)

ஓசியானியா நாடுகள்:

  • குக் ஐலேண்ட் (cook island)
  • பிஜி (fiji)
  • மார்ஷல் ஐலேண்ட் (marshall island)
  • மைக்ரோனேசியா (micronesia)
  • நியு (niue)
  • பலாவ் ஐலேண்ட் (palau island)
  • சமோவா ஐலேண்ட் (samoa island)
  • துவாலு (tuvalu)
  • வனுவாட்டு (vanuatu)

அமெரிக்க நாடுகள்:

  • லெஸ்டே
  • பொலிவியா
  • எல் சல்வடோர் (el salvador)

கரீபியன் நாடுகள்:

  • பார்படாஸ் (barbados)
  • பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட் (british virgin islands)
  • டொமினிகா (dominica)
  • கிரெனடா (grenada)
  • ஜமைக்கா (jamaica)
  • மாண்ட்செராட் (montserrat)
  • செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (saint kitts and nevis)
  • செயின்ட் லூசியா (saint lucia)
  • செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (saint vincent and the grenadines)
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ (trinidad and tobago)

ஆப்ரிக்க நாடுகள்:

  • போட்ஸ்வானா
  • புருண்டி (burundi)
  • கேப் வெர்டே ஐலேண்ட் (cape verde)
  • கொமோரோ ஐலேண்ட் (comoro island)
  • எத்தியோப்பியா
  • காபோன்
  • கினியா-பிசாவ்
  • மடகாஸ்கர்
  • மொரிட்டானியா
  • மொரீஷியஸ்
  • மொசாம்பிக்
  • ருவாண்டா
  • செனகல்
  • சீஷெல்ஸ்
  • சியரா லியோன் (sierra leone)
  • சோமாலியா
  • தான்சானியா
  • டோகோ
  • துனிசியா
  • உகாண்டா
  • ஜிம்பாப்வே