ADVERTISEMENT

எமிரேட்டுகளுக்கு இடையே பயணிப்பவர்களின் கவனத்திற்கு.. ஈத் விடுமுறையில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து இயக்க நேரம்..!! RTA செய்த ட்வீட்.….

Published: 29 Jun 2023, 6:35 PM |
Updated: 29 Jun 2023, 6:52 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் ஈத் அல் அத்ஹா விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து இயங்கும் நேரங்களில் மாற்றங்களை துபாய் அறிவித்திருக்கிறது. அதன்படி அபுதாபி சென்ட்ரல் பஸ் ஸ்டேஷனை நோக்கிச் செல்லும் பயணிகளுக்கு, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது, ஈத் அல் அதா விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் ஜூலை 2ஆம் தேதி வரை அல் குபைபா மெட்ரோ பேருந்து நிறுத்தத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் E100 பேருந்தின் கடைசி பயணமானது (trip) பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, துபாயில் உள்ள பொதுப் பேருந்துகளின் திருத்தப்பட்ட நேரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு:

திங்கள் முதல் வியாழன் வரை அதிகாலை 4.30 முதல் மறுநாள் நள்ளிரவு 12.30 வரையிலும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிறு காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் பேருந்துகள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது இயங்கும் இன்டெர்-சிட்டி பேருந்து வழித்தடங்கள்:

  • E16 பஸ் – அல் சப்காவிலிருந்து ஹத்தா வரை
  • E100 பஸ் – அல் குபைபாவிலிருந்து அபுதாபி வரை
  • E101 பஸ் – இபின் பதூதாவிலிருந்து அபுதாபி வரை
  • E102 பஸ் – இபின் பதூதாவிலிருந்து அல் முசாஃபா வரை
  • E201 பஸ் – அல் குபைபாவிலிருந்து அல் அய்ன் வரை
  • E303 பஸ் – யூனியன் ஸ்டேஷனிலிருந்து அல் ஜுபைல் வரை
  • E306 பஸ் – அல் குபைபாவிலிருந்து ஷார்ஜாவில் அல் ஜுபைல் வரை
  • E307 பஸ் – சிட்டி சென்டர் தேராவிலிருந்து ஷார்ஜாவில் அல் ஜுபைல் வரை
  • E307A பஸ் – அபு ஹைலிலிருந்து ஷார்ஜாவின் அல் ஜுபைல் வரை
  • E315 பஸ் – எடிசலாத் ஸ்டேஷனிலிருந்து ஷார்ஜாவில் முவைலே வரை
  • E400 பஸ் – யூனியன் ஸ்டேஷனிலிருந்து அஜ்மான் வரை
  • E411 பஸ் – எடிசலாட் நிலையத்திலிருந்து அஜ்மான் வரை மற்றும்
  • E700 பஸ் – யூனியன் ஸ்டேஷனிலிருந்து ஃபுஜைரா வரை.