ADVERTISEMENT

ஓமான் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200% அதிகரிப்பு… அடுத்த ஆண்டு அதிக அளவு இந்தியர்களை கவர திட்டம்!!

Published: 25 Jul 2023, 5:18 PM |
Updated: 25 Jul 2023, 5:18 PM |
Posted By: admin

ஓமான் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 200 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2021 இல் 106,042 பயணிகள் ஓமான் நாட்டிற்கு வருகை புரிந்த நிலையில் ​​2022 இல் பயணிகளின் எண்ணிக்கையானது 355,459 என அதிகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவானது ஓமான் நாட்டின் சுற்றுலாத்துறையில் பங்களிக்கும் இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

மொத்த சுற்றுலா பயணிகளை கணக்கில் கொள்ளும் பொழுது 2022 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் பயணிகள் ஓமானுக்கு வருகை புரிந்துள்ளனர். இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 348 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய சந்தையை மேலும் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஓமானின் சுற்றுலாத் திறனை மேம்படுத்துவதற்கான ஒர்க் ஷாப் நேற்று (திங்கள்கிழமை) புது தில்லியில் தொடங்கியது. மேலும், ஜூலை 31 வரை இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ஓமான் நாட்டின் பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் தொடர் ஒர்க்ஷாப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமான் நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் அஸ்மா பின்ட் சலேம் அல் ஹஜ்ரி, இந்திய பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு பல ப்ரொமோஷன்கள் நிறைந்த ஒர்க்ஷாப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டை கணக்கில் கொள்ளும் பொழுது ஜனவரி முதல் மே வரை ஓமன் நாட்டிற்கு வந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 1,548,630 என பதிவாகியுள்ளது என்றும், இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 95.1 சதவீதம் அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஹோட்டலில் தங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, ஹோட்டல்களின் வருவாயை கணக்கிடும் பொழுது 3-5 நட்சத்திர ஹோட்டல்களின் வருவாய் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 200,431 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.