ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை 6.8% உயர்த்திய அமீரக எரிபொருள் விலைக் கமிட்டி…!! உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட தாக்கம்..!!

Published: 2 Aug 2023, 7:46 AM |
Updated: 2 Aug 2023, 8:30 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைக் கமிட்டி (Fuel Price Committee) ஒவ்வொரு மாதமும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து அறிவித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், திங்களன்று (ஜூலை 31) ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமீரக அரசு அறிவித்திருந்தது. 6.8 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு வந்துள்ளது. மேலும், அமீரகத்தில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமிட்டி வெளியிட்டுள்ள விலைப் பட்டியலின் படி, ஆகஸ்ட் மாதத்திற்கு Super 98 விலை லிட்டருக்கு 14 ஃபில்ஸ் (4.6%)அதிகரித்து 3.14 திர்ஹம்களாகவும், ஸ்பெஷல் 95 விலை லிட்டருக்கு 13 ஃபில்ஸ் (4.5%) அதிகரித்து 3.02 திர்ஹம்களாகவும், E-Plus 91 இன் விலை லிட்டருக்கு 14 ஃபில்ஸ் அதிகரித்து 2.95 திர்ஹம்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, ஆகஸ்ட் 2023 இல் டீசல் விலை லிட்டருக்கு 2.95 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்படும், இது ஜூலை மாத விலையை விட 6.8 சதவீதம் அல்லது 19 ஃபில்கள் அதிகமாகும்.

அத்துடன் சூப்பர் 98, ஸ்பெஷல் 95 மற்றும் E-பிளஸ் 91 ஆகியவை முறையே 3.16 திர்ஹம், 3.05 திர்ஹம் மற்றும் 2.97 திர்ஹம் என்ற விலையின் அடிப்படையில் அமீரகத்தில் பெட்ரோல் விலையானது கடந்த ​​மே மாதத்தில் அதிகபட்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உலகளவில் எண்ணெய் விலைகள் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதம் வரையிலும் சவூதி அரேபியா தன்னார்வ உற்பத்தி (voluntary output) குறைப்புகளை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எண்ணெய் விநியோகம் குறைந்து விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஆகவே, ஜூலையில் உலகளாவிய எண்ணெய் விலை சுமார் $10 அதிகரித்து, ஒரு பீப்பாய் $80ஐ தாண்டியது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே, இந்த மாதத் தொடக்கத்தில் Oxford Economics, 2030 களின் நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் தேவை குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதன் முந்தைய கணிப்பைக் காட்டிலும், 2027 இல் உலக எண்ணெய் தேவை உச்சத்தைத் தொடும் என்ற அறிவிப்பை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022இலிருந்து இந்தாண்டு ஆகஸ்ட் வரை அமீரகத்தில் சில்லறை எரிபொருளின் விலைகள் எந்த அளவிற்கு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன என்பதைப் பின்வரும் விலைப் பட்டியலில் பார்க்கலாம்:

மாதங்கள் Super 98 Special 95 E-பிளஸ்
ஜனவரி-22 2.65 2.53 2.46
பிப்ரவரி 2.94 2.82 2.75
மார்ச் 3.23 3.12 3.05
ஏப்ரல் 3.74 3.62 3.55
மே 3.66 3.55 3.48
ஜூன் 4.15 4.03 3.96
ஜூலை 4.63 4.52 4.44
ஆகஸ்ட் 4.03 3.92 3.84
செப்டம்பர் 3.41 3.3 3.22
அக்டோபர் 3.03 2.92 2.85
நவம்பர் 3.32 3.2 3.13
டிசம்பர் 3.3 3.18 3.11
ஜனவரி-23 2.78 2.67 2.59
பிப்ரவரி 3.05 2.93 2.86
மார்ச் 3.09 2.97 2.9
ஏப்ரல் 3.01 2.9 2.82
மே 3.16 3.05 2.97
ஜூன் 2.95 2.84 2.76
ஜூலை 3 2.89 2.81
ஆகஸ்ட் 3.14 3.02 2.95