ADVERTISEMENT

துபாயில் நிலவும் சீரற்ற வானிலை: பொது பூங்காக்கள் தற்காலிக மூடல், கடலில் இரவு நேர குளியலுக்கு தடை..!! முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

Published: 6 Aug 2023, 8:53 PM |
Updated: 6 Aug 2023, 9:18 PM |
Posted By: admin

துபாயில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் பொதுப் பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்படும் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் துபாய் முனிசிபாலிட்டி இன்று கடற்கரைகளில் இரவு நேரங்களில் குளிக்க தற்காலிகமாக தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று இரவு 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது அமீரகத்தில் நிலவும் ஏற்ற இறக்கமான வானிலைக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்றும் இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT