ADVERTISEMENT

UAE: கண்கவர் டிசைன்களில் தலாபத் அறிமுகப்படுத்தும் புதிய கிரெடிட் கார்டு..!! அன்லிமிட்டெட் இலவச டெலிவரி, வெல்கம் போனஸ் என எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் கூட்டு முயற்சி…!!

Published: 9 Aug 2023, 12:53 PM |
Updated: 9 Aug 2023, 12:57 PM |
Posted By: Menaka

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான தலாபத், அமீரகத்தின் முன்னணி வணிக வங்கியான அபுதாபி கமர்ஷியல் வங்கியுடன் (ADCB) கூட்டு சேர்ந்து ‘தலாபத் ADCB கிரெடிட் கார்டை’ அறிமுகப்படுத்த உள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த கிரெடிட் கார்டு, அன்லிமிட்டெட் இலவச டெலிவரி மற்றும் தள்ளுபடிகள் போன்ற பல நன்மைகளுடன் வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கட்டணங்கள் இன்றி, தலாபத் ஆப் மூலம் இதனை எளிதாகப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய கிரெடிட் கார்டு, பல்வேறு வகையான உணவு ஆர்வலர்களுக்கு ஏற்றவாறு 7 உணவு-தீம்களுடன் கொண்ட டிசைன்களைக் (food-themed designs) கொண்டுள்ளது. குறிப்பிட்ட டிசைன் கார்டைப் பொருட்படுத்தாமல் அனைத்து கார்டுதாரர்களும் தலாபத் செயலியைப் பயன்படுத்தும் போது, தலாபத் உடன் கூட்டு சேர்ந்த உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து செய்யப்படும் ஆர்டர்களுக்கு வெல்கம் போனஸ் மற்றும் காம்ப்ளிமென்டரி டெலிவரி போன்ற நன்மைகளை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

அத்துடன் பிளாட்டினம் மாஸ்டர்கார்டு என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கார்டுக்கு, ADCB மூலம் அனுவல் கார்டு கட்டணங்கள் (annual card fees) விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலாபத்தில் பின்வரும் சலுகைகளையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது:

>> ஒவ்வொரு மாதமும் முதல் பத்து ஆர்டர்களுக்கு 35 சதவீத தலாபத் கிரெடிட் வழங்கப்படும், இந்த கிரெடிட் அடுத்த மாதத்தில் அவர்களின் ‘தலாபத் பே வாலட்டில்’ டெபாசிட் செய்யப்படும்.

>> தலாபத் புரோ உணவகங்கள் மற்றும் ஸ்டோர்களில் இருந்து 50 திர்ஹம்ஸைத் தாண்டிய உணவு ஆர்டர்களுக்கு மற்றும் உணவு அல்லாத கடைகளில் 100 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு வரம்பற்ற இலவச டெலிவரி, சந்தா கட்டணங்கள் ஏதுமின்றி வழங்கப்படும்.

>> புதிதாக வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 2,500 திர்ஹம்ஸ் செலவழிக்கும் போது தலாபத் கிரெடிட்டின் வெல்கம் போனஸ் ஆக 500 திர்ஹம்ஸைப் பெறலாம்.

>> அமீரகத்திற்குள் அல்லது அதற்கு அப்பால் உள்ள பரிவர்த்தனைகளுக்கு தலாபத் ADCB கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் கார்டுதாரர்களுக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச செலவினங்களில் மாதாந்திர தலாபத் கிரெடிட்டாக, அவர்கள் தங்கள் பரிவர்த்தனை மதிப்பில் 1.25 சதவீதம் வரை சம்பாதிக்கலாம். இது அடுத்த மாதம் அவர்களின் தலாபத் பே வாலட்டில் வரவாக வைக்கப்படும்.

இத்தகைய சலுகைகள் நிறைந்த கிரெடிட் கார்டை தலாபத் செயலியில் சில எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் பெறலாம். மேலும், https://adcb.com/talabat என்ற இணையதளம் மூலமாகவும், 2626 என்ற எண்ணுக்கு ‘தலாபத்’ என்று SMS அனுப்புவதன் மூலமும் அல்லது ஏதேனும் ADCB வங்கிக் கிளைக்குச் சென்றும் உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5,000 திர்ஹம்ஸ் மாத வருமானத்துடன் அமீரகத்தில் வயது வந்தவர்களாக இருக்க வேண்டும். கார்டுக்கான வெளியீட்டுத் தேதி ஆகஸ்ட் 7, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.

கண்கவர் டிசைன்கள்:

இந்த கோ-பிராண்ட் கார்டு வாடிக்கையாளர்களின் பல்வேறு உணவு விருப்பங்களை நிறைவு செய்ய பின்வரும் உணவு-தீம்களுடன் கூடிய டிசைன்களின் உணவு வரிசையை வழங்குகிறது.

  1. தி ட்ரெடிஷனலிஸ்ட் கார்டு  – ஹம்முஸ் டிசைன்
  2. தி ஹெல்த் ஃபேனடிக் கார்டு – அவகேடோ டிசைன்
  3. தி ஸ்வீட் டூத் கார்டு – மக்ரூன்கள் டிசைன்
  4. தி ஸ்னாக்கர் கார்டு – பாப்கார்ன் டிசைன்
  5. தி கம்ஃபர்ட் ஈட்டர் கார்டு – பீட்சா டிசைன்
  6. தி டேர்டெவில் கார்டு –  சில்லி பெப்பர்ஸ் டிசைன்
  7. தி எவ்ரிதிங் ஃபுடி கார்டு – ஆரஞ்சு டிசைன்