ADVERTISEMENT

உணவகத்தில் திடீரென கேஸ் வெடித்து விபத்து..!! 18 பேர் காயம்..!! ஓமான் காவல்துறை அறிக்கை வெளியீடு..!!

Published: 13 Aug 2023, 3:19 PM |
Updated: 13 Aug 2023, 3:55 PM |
Posted By: admin

ஓமானில் உள்ள சீப் (seeb) விலாயத்தின் தெற்கு மாபேலா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்களாகியுள்ளது. இந்த திடீர் விபத்தின் போது உணவகத்தில் இருந்த 18 பேர் காயமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறை (CDAA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதே போல் ராயல் ஓமன் காவல்துறையும் (ROP) இந்த விபத்தினால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் அதன் தாக்கம் அருகிலுள்ள வாகனங்கள் மற்றும் கட்டிடங்களால் உணரப்பட்டது எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT


இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் “மபேலாவில் உள்ள ஒரு உணவகத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சிலர் காயமடைந்தனர் மற்றும் சில சுற்றியுள்ள வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. இது சமையல் எரிவாயு காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் தளத்தில் சூழ்நிலையை கையாள்கின்றன” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதகவும் இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.