ADVERTISEMENT

பெண்களை பணிபுரியும் இடத்தில் அதிக நேரம் நிற்க வைத்தால் 3,000 ரியால் அபராதம்… எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா!

Published: 14 Aug 2023, 7:36 AM |
Updated: 14 Aug 2023, 8:49 AM |
Posted By: admin

சவுதி அரேபியாவில் பணியில் இருக்கும் போது பெண் தொழிலாளர்களை உட்கார விடாமல் தடுப்பது சவுதி தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகும் என்றும், இந்த விதிமீறல் கண்டறியப்பட்டால் 3,000 ரியால் வரை தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து, சவூதி அரேபிய மனிதவள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் ரஸேகி கூறுகையில், “விற்பனை மற்றும் வரவேற்பறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களை எப்போதும் நின்று கொண்டிருக்குமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது. மேலும், இது போன்ற தொழில்களுக்கு அதிக நேரம் நிற்க வேண்டும் என்பது அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், பெண் ஊழியர்கள் உட்காருவதைத் தடுப்பது தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு 1,000 ரியால் முதல் 3,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். சவுதி அரேபியாவில் சமூக-பொருளாதார மாற்றங்களின் ஒரு பகுதியாக தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபாடுகள் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு இந்த முடிவு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாட்டில் அதன் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதித்ததை அடுத்து பல தசாப்தங்களாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

மேலும், பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்தும் மற்றொரு நடவடிக்கையில், சவூதி அரேபியா பெண்கள் ஆண் துணையின்றி பயணம் செய்ய அனுமதித்தது மற்றும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும், அவர்கள் மீதான நீண்ட கால கட்டுப்பாடுகளை தளர்த்தியது. சவுதி அரேபியாவில் தற்போது உள்ள 11 சவுதி தூதர்களில் இரண்டு பெண் தூதர்களும் அடங்குவர், அவர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் முன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். எனவே, பெண்களின் முன்னேற்றம் மற்றும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு சவுதி அரேபிய அரசு தற்போது பணி புரியும் இடத்தில் பெண்கள் நடத்த வேண்டிய முறையைப் பற்றி எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT