ADVERTISEMENT

துபாய்: குடியிருப்பாளர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் பஸ் சேவையை அறிவித்துள்ள RTA..!! பேருந்து வழித்தடங்கள், நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள் ஆகிய விவரங்களும் வெளியீடு…!!

Published: 25 Aug 2023, 6:58 PM |
Updated: 25 Aug 2023, 7:06 PM |
Posted By: Menaka

துபாயில் வசிப்பவர்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கும் புதிதாக தொடங்கியுள்ள இலவச எலக்ட்ரிக் பஸ் ரைடுகளை அனுபவிக்கலாம் என தெரிவித்துள்ளது. அத்துடன் எலெக்ட்ரிக் பஸ்களில் துபாயின் பிரபலமான இடங்களான வைல்ட் வாதி (wild wadi) அல்லது புர்ஜ் அல் அராப் போன்றவற்றை சுற்றிப்பார்க்கலாம் எனவும் RTA கூறியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, RTA அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில், தற்போது லா மெரில் இருந்து அல் சுஃபுக்கு எலெக்ட்ரிக் பஸ் சோதனை சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், எலெக்ட்ரிக் பஸ் செல்லும் வழித்தடத்தில் நீங்கள் ஜுமேரா கடற்கரை சாலையின் பெரும்பகுதியையும் கைட் பீச் மற்றும் உம் சுகீம் 2 பொது கடற்கரை போன்ற பல பொது கடற்கரைகளையும் பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எலெக்ட்ரிக் பஸ்ஸில் செல்வது எப்படி?

புதிய எலெக்ட்ரிக் பஸ் ரூட் eB1, லா மெர் சவுத் மற்றும் அல் சுஃபு ட்ராம் ஸ்டேஷன் இடையே பயணிக்கிறது. ஆகையால், புதிய சோதனை வழித்தடத்தில் உள்ள எந்த பேருந்து நிலையத்திலிருந்தும் நீங்கள் எலெக்ட்ரிக் பஸ்ஸில் ஏறலாம்.

எலெக்ட்ரிக் பஸ் வழித்தடத்தில் உள்ள பஸ் நிறுத்தங்கள்:

  1. லா மெர் சவுத்
  2. மெர்கடோ மால்
  3. ரஷித் பின் பக்கைத் மஸ்ஜித்
  4. மஜ்லிஸ் அல் கோரைஃபா
  5.  துபாய் ஆஃப்ஷோர் சைலிங் கிளப்.
  6. உம் சுகீம் 1
  7. உம் சுகீம் பூங்கா
  8. வைல்ட் வாதி
  9. புர்ஜ் அல் அரபு
  10. அல் சுஃபு டிராம் நிலையம்.

ADVERTISEMENT

லா மெர் மற்றும் அல் சுஃபு இடையே இலவச பேருந்துப் பகுதிகளுக்கான நேரங்கள்:

இந்த வழித்தடத்தில் உள்ள லா மெர் சவுத் மற்றும் அல் சுஃபுஹ் டிராம் நிலையம் ஆகிய இரு முனைய நிறுத்தங்களிலிருந்தும் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் பேருந்து புறப்படும்.

லா மெர் சவுத்திற்கான பேருந்து நேரங்கள்

  • காலை 10 மணி
  • பிற்பகல் 12 மணி
  • மதியம் 2 மணி
  • மாலை 4 மணி
  • மாலை 6 மணி
  • இரவு 8 மணி
  • இரவு 10 மணி

அல் சுஃபுஹ் டிராம் நிலையத்திற்கான பேருந்து நேரங்கள்

  • காலை 10.40 மணி
  • மதியம் 12.40 மணி
  • மதியம் 2.40 மணி
  • மாலை 4.40 மணி
  • மாலை 6.40 மணி
  • இரவு 8.40 மணி
  • இரவு 10.40 மணி