ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று பதிவான நிலநடுக்கம்..!! ஒரு சில குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக தகவல்..!!

Published: 11 Oct 2023, 9:12 AM |
Updated: 11 Oct 2023, 9:19 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபுஜைராவில் உள்ள திப்பா பகுதியில் இன்று (புதன்கிழமை) 1.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஃபுஜைராவில் காலை 6.18 மணியளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல குடியிருப்பாளர்கள் சிறிய நடுக்கத்தை அனுபவித்தாலும், நாட்டிற்குள் குறிப்பிடத்தக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடிக்கடி ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் பற்றி கூறுகையில் அமீரகவாசிகள் இந்த நிலநடுக்கங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நிபுணர்கள் முன்பு கூறியிருந்தனர். மேலும் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “அமீரகத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று வரை அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. மக்கள் இந்த நடுக்கங்களை அதிகம் உணர்வதில்லை, அவை சென்சார்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. இந்த நடுக்கம் அனைத்தும் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பை (நாட்டில்) பாதிக்காது” எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel