ADVERTISEMENT

அமீரகத்தை சுற்றிப்பார்க்க புதிய ஃபேமிலி குரூப் விசா.. குழந்தைகளுக்கு விசா இலவசம்..!!

Published: 2 Nov 2023, 9:30 AM |
Updated: 2 Nov 2023, 9:31 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வியப்பூட்டும் பாலைவனக் காட்சிகள், பரந்து விரிந்த கடற்கரைகள் மற்றும் பிரபலமான சுற்றுலா இடங்கள் போன்றவற்றை உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர் என குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்க்க திட்டமிடுபவர்களுக்கு ஒரு நற்செய்தியை அமீரக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் வெளிநாட்டவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜென்சிகள் மூலம் ஒரு குழுவாக குடும்ப விசாக்களுக்கு (family group visa) விண்ணப்பிக்க பெற்றோர் மற்றும் அவர்களது குழந்தைகளை அனுமதிக்கிறது. மேலும், இதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் செல்லும் போது அவர்களுக்கு விசா கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இந்த சலுகையை வெளிநாட்டவர்கள் அணுக முடியும் என்றும், சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் என்ட்ரி மற்றும் ரெசிடன்ட் பெர்மிட் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கைத் (Khalaf al Ghaith) அவர்கள் அமீரகத்தின் ஆங்கில செய்த ஊடகம் ஒன்றிற்கு அளித்த செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

UAE ஃபேமிலி குரூப் விசா:

இந்த விசாவிற்கு குடும்பமாக சேர்ந்து பயணம் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பயண நிறுவனங்கள் இந்த விசாவின் கீழ் இப்போது 30 முதல் 60 நாட்கள் வரையிலான குறுகிய கால சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன், விசா காலாவதியாகும் முன் அதிகபட்சமாக 120 நாட்களுக்கு விசாவை நீட்டிக்கும் விருப்பமும் இதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஏற்கனவே கூறிய படி, நீங்கள் அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இந்த ஃபேமிலி குரூப் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பின்வரும் இந்த இரண்டு ஆவணங்களை பயண நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

  • குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்,
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

மேலும் இது குறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் https://smart.gdrfad.gov.ae/ என்ற GDFRA இணையதளத்தின் மூலமும் தேவையான ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel