துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அமீரக யூனியன் தின விடுமுறையை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச பொது பார்க்கிங்கை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் வரும் டிசம்பர் 2 சனிக்கிழமை முதல் டிசம்பர் 4 திங்கட்கிழமை வரை வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் மல்டி லெவல் டெர்மினல்கள் தவிர அனைத்து பொது வாகன நிறுத்தங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பார்க்கிங் கட்டணம் டிசம்பர் 5, 2023 செவ்வாய் அன்று மீண்டும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயைப் போன்றே மற்ற எமிரேட்டுகளிலும் யூனியன் தினத்தை முன்னிட்டு இலவச பார்க்கிங் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிசம்பர் 2 முதல் 4 ம் தேதி வரை அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel