ADVERTISEMENT

ஆகஸ்ட் 16 முதல் தமிழகத்திலிருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியீடு..!! அபுதாபிக்கும் கூடுதல் விமானங்கள் ஒதுக்கீடு..!!

Published: 11 Aug 2020, 5:05 PM |
Updated: 11 Aug 2020, 5:53 PM |
Posted By: jesmi

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை இயக்கப்படவிருக்கும் விமானங்களின் பயண அட்டவணையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பயண அட்டவணையின்படி, தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மொத்தம் 31 விமானங்கள் இயக்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களில், 16 விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்தும், 15 விமானங்கள் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானங்கள் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுநாள் வரையிலும், அமீரக ரெசிடெண்ட் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அமீரகம் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது செல்லுபடியாகும் அனைத்து வகையான விசாக்களிலும் அமீரகம் பயணிக்கலாம் என இந்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதேபோல், அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப ICA அல்லது GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம் என இருந்து வந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 11) முதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளுக்கு ICA ஒப்புதல் தேவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சென்னையிலிருந்து செல்லும் விமானங்களின் விபரங்கள்…

திருச்சியிலிருந்து செல்லும் விமானங்களின் விபரங்கள்…

ADVERTISEMENT

அபுதாபி வரும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ICA அனுமதி தேவை இல்லை..!! ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல்..!!

UAE : செல்லுபடியாகும் அனைத்து விசாக்களின் மூலமும் அமீரகம் வர இந்தியா அனுமதி..!! இந்திய தூதர் அறிவிப்பு..!!