ADVERTISEMENT

அமீரகத்தில் தொடரும் கனமழை: அபுதாபி-துபாய் சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..!!

Published: 13 Feb 2024, 1:44 PM |
Updated: 13 Feb 2024, 1:46 PM |
Posted By: admin

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஆங்காங்கே போக்குவரத்தில் சிரமங்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அபுதாபியில் சைஹ் ஷுஐப் பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளில் செல்லுமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“ஷேக் மக்தூம் பின் ரஷித் ஸ்ட்ரீட்டில் உள்ள சைஹ் ஷுஐப் பாலத்திலிருந்து துபாய் நோக்கிய ஷேக் முகமது பின் ரஷீத் சாலைக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது, எனவே மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஷேக் சயீத் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மற்றொரு மாற்றுப்பாதையை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் “தண்ணீர் தேங்கியுள்ளதால் ஜெபல் அலி பகுதியில் உள்ள ஷேக் சயீத் சாலையில் சாலை மாற்றுப்பாதையை பயன்படுத்தவும்” என RTA தெரிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து சிரமங்களை சீராக்க RTA குழுக்கள் நிலைமையை கையாண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel