ADVERTISEMENT

சவூதியில் நடைபெற்ற உலகளாவிய தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (THE RISE) மற்றும் அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் குழுமத்தின் (G-TEF) துவக்கவிழா..!!

Published: 27 Feb 2024, 9:17 PM |
Updated: 27 Feb 2024, 9:27 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் உலகளாவிய தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (THE RISE) மற்றும் அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் குழுமத்தின் (G-TEF) துவக்கவிழா கடந்த வெள்ளிக்கிழமையன்று விமரிசையாக நடைபெற்றது.

ADVERTISEMENT

உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் பொறியாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வளர்கள், பல்துறை வல்லுணர்கள் மற்றும் பிரபலங்களை ஒன்றிணைக்கும் “எழுமின் (RISE)” அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் தலைமையில் இந்திய தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்திகழ்ச்சி தொடங்கியது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர் மற்றும் எழுமின் சவூதி பிரிவின் துணைத்தலைவர் திரு. மாலிக், எழுமின் சவூதி பிரிவின் தலைவர் திரு. சாகுல் ஹமீத், மற்றும் அனைத்துலக பொறியாளர்கள் கூட்டமைப்பின் சவூதி பிரிவு தலைவர் திரு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, தி ரைஸ் (THE RISE) மற்றும் ஜி டெஃப் (G-TEF)ன் சவூதி அரேபிய பிரிவுகளை இந்திய தூதரகத்தின் வணிக மற்றும் பொருளாதார ஆலோசகர் திருமதி. மனுஸ்ம்ரிதி மற்றும் நிறுவனர் ஜெகத் கஸ்பார் இணைந்து தொடக்கி வைத்தனர்.

ADVERTISEMENT

பொறியாளர் மற்றும் தலைமைத்துவ பயிற்சியாளர் திரு. பைசல் அவர்களின் சவூதி தொழில்வாய்ப்புகள் தொடர்பான கலந்தாய்வு, டாக்டர். கபாலி அவர்களின் தொழில் வியூகம் தொடர்பான பயிற்சி பட்டரை, DuVolks நிறுவன தலைவர் திரு. சல்மான் அவர்களின் தொழில்முனைவோருக்கான ஆலோசனை, ALLCARE GROUP நிறுவனர் திரு. சுல்தான் அல்மன்சூர் அவர்களின் மருத்துவ அறிவியலில் தொழில் வாய்ப்பு தொடர்பான அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அத்துடன், நேட்ச்சுரல்ஸ் நிறுவன தலைவர் திரு. சாக்கோச்சன் அவர்களின் முகமை (Franchise) தொழில் வாய்ப்பு, எழுமின் வளைகுடா தலைவர்களின் வாழ்த்துரை, பொறியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கலந்தாய்வுக்கூடம், மேலும் பிரதான புரவலர்களின் தொழிற்குறிப்புகள் ஆகியவை திரு.சிவா அவர்களின் ஒருங்கிணைப்பில் மிக சுவாரசியமாக நடந்து முடிந்தது.

இறுதியாக சவூதி உட்பட வளைகுடா மற்றும் பிற நாடுகளில் இருந்து கலந்துகொண்ட பொறியாளர்கள், திறனாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் புரவலர்களுக்கு திரு.மாதவன் நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.