ADVERTISEMENT

அமீரகத்தில் சாலை விபத்துகளுக்கான காரணம் குறித்த கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முதலிடம் பிடித்தது எது தெரியுமா.?

Published: 4 Mar 2024, 8:56 AM |
Updated: 4 Mar 2024, 8:56 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலைகளில் பயணிக்கும் சில வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில் கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுவது பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. மேலும் இது சில சமயங்களில் உயிரிழப்பிற்கும் வழிவகுக்கிறது.

ADVERTISEMENT

இப்படியான நிலையில், அமீரகத்தில் ஒவ்வொரு மூன்று வாகன ஓட்டிகளில் ஒருவர் வாகனம் ஓட்டும்போது தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதாகவும், அவர்களின் கவனச் சிதறலால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் துபாயின் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் Road Safety UAE மற்றும் அல் வத்பா இன்சூரன்ஸ் போன்றவற்றால் துபாயில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கவனச்சிதறலுக்கான ஒரு முக்கிய காரணம் மொபைல் போன்களின் பயன்பாடு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, 2022ம் ஆண்டில் மட்டும் வாகன ஓட்டிகள் கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டியதால் 85 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த ஜனவரி 2024 இல் இது குறித்து 1,001 நபர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அதிகமானோர் தங்களின் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது, 10 பேரில் 9 பேர் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதே சமயம் 10 பேரில் 8 பேர் மட்டுமே எப்போதும் சாலையில் முழுமையாக கவனம் செலுத்துவதாக கூறியுள்ளனர். அதாவது இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 77 சதவீத ஓட்டுநர்கள், தங்களின் மொபைல் ஃபோனை ஆஃப் செய்வது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சாலையில் கவனம் செலுத்த உதவுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து Road Safety UAEஇன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான தாமஸ் எடெல்மேன் என்பவர் கூறுகையில், ஓட்டுநரின் நடத்தை, காரில் உள்ள மற்றவர்களின் நடத்தை மற்றும் வெளிப்புற காரணிகளால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் தங்களுக்கும், தங்கள் பயணிகளுக்கும் மற்றும் பிற சாலைப் பயனாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த கவனச்சிதறல் ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கணக்கெடுப்பில் வாகன ஓட்டிகள் தங்கள் கவனத்தைச் சிதறடித்து ஓட்டுவதற்கு காரணமாக தெரிவித்த உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் விபரங்கள் சதவீத அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறக் காரணிகள்:

  • மொபைல் போன்கள் பயண்பாடு – 33%
  • நேவிகேஷன் அமைப்பு – 28%
  • ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஃபோன் அழைப்புகள் – 22%
  • காரில் உள்ள பொருட்களை எடுத்தல் – 21%
  • ஏர் கண்டிஷனிங் சரிசெய்தல் – 18%
  • சாப்பிடுவது மற்றும் குடிப்பது – 18%
  • ஓட்டுநருடன் பேசும் பயணிகள் – 17%
  • மோசமாக நடந்துகொள்ளும் குழந்தைகள் – 17%
  • வானொலி நிலையம்/பொழுதுபோக்கு அமைப்பை மாற்றுதல் – 15%
  • சிகரெட்டை எரித்தல்/புகைத்தல்/அணைத்தல் – 14%
  • மேக்கப் போடுதல் – 10%
  • வீடியோவைப் பார்க்கும் குழந்தைகள் – 10%

வெளிப்புற காரணிகள்:

  • மற்ற ஓட்டுனர்களின் நடத்தை – 41%
  • சிக்கலான சாலை அமைப்புகள் – 28%
  • விளம்பரப் பலகைகள் – 19%
  • சூப்பர் கார்கள் மற்றும் பிற சிறப்பு வாகனங்களை பார்வையிடுதல் – 19%
  • சாலையில் உள்ள அடையாளங்களை காணுதல் – 19%
  • UAE ஸ்கைலைன் – 17%
  • போக்குவரத்து விபத்தைப் பார்க்க வேகத்தைக் குறைத்தல் – 15%

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel