ADVERTISEMENT

அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 735 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவு..!!

Published: 7 Mar 2024, 4:25 PM |
Updated: 7 Mar 2024, 4:26 PM |
Posted By: admin

அமீரகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவை அமீரக தலைவர்கள் மேற்கொண்டு வருவர். அதே போல் இன்னும் ஓரிரு நாட்களில் வரவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறை கைதிகளை விடுவிக்க அமீரக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியான தகவலின்படி புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, 735 கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ஷேக் முகமது உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆவர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவானது கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டனைகளையும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு, பொது மன்னிப்புக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்த 1,018 கைதிகளை நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT