ADVERTISEMENT

UAE: கனமழை காரணமாக அமீரகத்தில் பல இடங்கள் இன்று முதல் மூடல்.. அனைத்து இடங்களின் பட்டியல் இதோ..!!

Published: 9 Mar 2024, 10:36 AM |
Updated: 9 Mar 2024, 10:53 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சனிக்கிழமை (மார்ச் 9) அதிகாலை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரையிலும் இடி, மின்னல் மற்றும் கனமழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் மஞ்சல் எச்சரிக்கை (yellow alert) விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் நிலவும் இத்தகைய மோசமான வானிலையை கருத்தில் கொண்டும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து எமிரேட்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக பொது இடங்கள், மழைநீர் தேங்கும் இடங்கள், வாட்டர் டாக்ஸி என பெரும்பாலான வசதிகள் தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.  அது குறித்த விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. அமீரகத்தின் அனைத்து பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் நேற்று முதலே மூடப்பட்டுள்ளது.

2. நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தனியார் துறை நிறுவனங்கள் தொலை தூர வேலை (remote work) முறையை பயன்படுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துபாய்:

  • துபாயின் பொழுதுபோக்கு இடங்களில் முக்கியமானதான குளோபல் வில்லேஜ் இன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
  • துபாயில் ஃபெர்ரி மற்றும் வாட்டர் டாக்ஸி சேவைகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக RTA அறிவித்துள்ளது.
  • துபாயில் பீச், பார்க், மார்கெட் ஆகிய அனைத்தும் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

அபுதாபி:

  • அபுதாபியில் பார்க் மற்றும் பீச் மோசமான வானிலை காரணமாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஷார்ஜா:

  • ஷார்ஜாவிலும் பார்க் மற்றும் பீச் மோசமான வானிலை காரணமாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
  • மருத்துவ உடற்தகுதி மையம் (medical fitness center) இன்று (சனிக்கிழமை) மூடப்பட்டுள்ளது.

அல் அய்ன்:

  • அல் அய்னில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் (tunnel) தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel