ADVERTISEMENT

ஷார்ஜாவின் தொழில்துறை பகுதியில் இன்று ஏற்பட்ட பெரும் தீவிபத்து..!!

Published: 26 Apr 2024, 5:59 PM |
Updated: 26 Apr 2024, 6:03 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள தொழில்துறை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து துபாய்-ஷார்ஜா எல்லைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் பேசிய போது, “நான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது, வெளியே வானத்தில் கரும்புகை சூழ்ந்திருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

KT reader: Tasmiyah Anwer

ADVERTISEMENT

சுமார் மதியம் 2.30 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து துபாய்க்குச் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரும், தொழில்துறை பகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறுவதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போலவே, மம்சார் கடற்கரைக்கு அருகாமையில் அபு ஹைலில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளரும், மதியம் 2.30 மணியளவில் அவரது வீட்டின் ஜன்னலில் இருந்து ஷார்ஜாவின் திசையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை போன்றே அப்பகுதியில் வசிக்கும் பல குடியிருப்பாளர்களும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

Photo: KT reader

இது குறித்து வெளியான புகைப்படங்களை பார்க்கும் போது, தொழில்துறை பகுதியில் உள்ள கிடங்கு ஏதேனும் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது. இருப்பினும் அந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

KT reader: Afsha Noori

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel