ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்ய தொடங்கிய கனமழை.. அபுதாபி, ராஸ் அல் கைமாவில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை..!!

Published: 1 May 2024, 11:13 PM |
Updated: 1 May 2024, 11:13 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் நிலையற்ற வானிலை காரணமாக இன்று இரவு முதல் நாட்டில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் (NCM) முன்னெச்சரிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த வானிலையானது இரவு 10 மணி முதல் தொடங்கி நாளை மாலை வரை நீடிக்கும் எனவும் NCM அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது அபுதாபியின் மேற்கு பகுதியான அல் ருவைஸ், கயாத்தி மற்றும் அல் சிலா ஆகிய பகுதிகளில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்து வரும் வீடியோக்களை அமீரகத்தின் புயல் மையம் தனது X தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

 

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை மையம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று இரவு முதல் தொடங்கும் இந்த நிலையற்ற வானிலையானது படிப்படியாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவும் எனவும், இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதனிடையில், கனமழை எச்சரிக்கை முன்னிட்டு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி துபாயில் பீச், பாரக் மற்றும் துபாய் முனிசிபாலிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்கள் நாளை மூடப்படும் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தற்போது ராஸ் அல் கைமா பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் தற்போதைய நிலவரப்படி அபதாபியின் மேற்கு பகுதியிலும், ராஸ் அல் கைமாவிலும் மட்டும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சில மணி நேரங்களில் நாடு முழுவதும் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel