ADVERTISEMENT

UAE: அரச குடும்பத்தை சேர்ந்த இளம் வயது ‘ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான்’ மரணம்.. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி நீதிமன்றம்..!!

Published: 9 May 2024, 12:33 PM |
Updated: 9 May 2024, 12:33 PM |
Posted By: admin

அபுதாபியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபரான ‘ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சையத் அல் நஹ்யான்’ அவர்கள் இன்று வியாழக்கிழமை மே 9ம் தேதி மரணமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான Wam வெளியிட்ட செய்தியில் ஜனாதிபதி நீதிமன்றம் தனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் “ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சையத் அல் நஹ்யானின் மரணத்திற்கு ஜனாதிபதி நீதிமன்றம் இதயப்பூர்வமான இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றது”.

“இறந்தவரின் மீது கருணையைப் பொழிவதற்கும், அவருக்கு சொர்க்கத்தை வழங்குவதற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பொறுமை மற்றும் ஆறுதலையும் வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று மரணமடைந்துள்ள ஷேக் ஹஸ்ஸாவிற்கு 30 களின் மத்தியில் வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் தற்போதைய ஜனாதிபதியான ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யானின் பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2019 இல் மறைந்த ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹ்யானின் மகன் ஆவார். இவரின் தந்தை மறைந்த ஜனாதிபதி ஷேக் கலீஃபாவின் சகோதரர் ஆவார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹஸ்ஸா குதிரை சவாரி செய்வதில் திறமையானவர் என்றும், குதிரையேற்றங்களில் நன்கு அறியப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று திடீரென இறந்த ஷேக் ஹஸ்ஸாவின் இறப்புக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel