ADVERTISEMENT

UAE: உணவு தயாரிக்கும் பகுதியில் பூச்சிகள்.. Cafe-யை அதிரடியாக மூட உத்தரவு..!!

Published: 25 May 2024, 9:14 AM |
Updated: 25 May 2024, 9:19 AM |
Posted By: admin

அபுதாபியில் இருக்கக்கூடிய உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் சுகாதார நெறிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் சுகாதாரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட சில நெறிமுறைகளை கருத்தில் கொண்டு அவற்றிற்கு கிரேடு தரப்பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் ‘A’ கிரேடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள உணவகமானது சிறந்த உணவகம் என்று கூறப்படுகின்றது. இந்த கிரேடு ‘A’, ‘B’, ‘C’, ‘D’ என பிரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஒரு உணவகத்திற்குள் செல்வதற்கு முன்னரே அவற்றின் தரத்தை உணவக வாயிலேலேயே தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் விதிமுறைகளுக்கு இணங்காத உணவகங்கள் மற்றும் கஃபேக்களை அவற்றின் விதிமீறலைப் பொறுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் அல்லது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்றால் அவற்றை மூட உத்தரவிட்டும் வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வரிசையில் அபுதாபியில் உள்ள ஒரு கஃபே, உணவு தயாரிக்கும் பகுதியில் பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியதற்காக அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம், அபுதாபி எமிரேட்டில் உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள் தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) ஐ மீறியதற்காக அபுதாபியில் இயங்கி வந்த ஸ்பாட் கரக் எனும் உணவகத்தை மூடுவதற்கான முடிவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கான மீறல் மற்றும் அதிக ஆபத்துள்ள மீறல்கள் உணவுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதித்துள்ளன குறிப்பாக உணவு தயாரிக்கும் பகுதியில் பூச்சிகள் காணப்படுவதால், உணவுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதித்துள்ளது” என்று ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விதிமீறல்கள் நீடிக்கும் வரை நிர்வாக மூடல் உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கஃபே நிலைமையை சரிசெய்து, செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel