ADVERTISEMENT

UAE: ஹஜ், உம்ரா ஆப்பரேட்டர்களுக்கு புதிய விதிகளை அறிவித்த அமீரக அரசு.. மீறுபவர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..!!

Published: 27 May 2024, 3:55 PM |
Updated: 27 May 2024, 4:00 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையமானது ஹஜ்/உம்ரா சேவை வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஹஜ்/உம்ரா சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, உரிமம் இல்லாமல் புனித பயணத்திற்காக வேண்டி நன்கொடைகள் சேகரிப்பதற்கோ பெறுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் இஸ்லாமிய புனித பயணத்தை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உரிமம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான அபராதங்கள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் ஹஜ்/உம்ராவிற்கான சேவைகளை தவறாக பயன்படுத்தினால் அதிக அபராதம் ஆணையத்தால் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் தனி நபர்கள், அமைப்பாளர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஹஜ் மற்றும் உம்ரா பிரச்சாரங்களுக்கான உரிமங்கள் தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்கி ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், புனித பயணத்திற்கான நடவடிக்கைகள் மற்றும் உம்ராவிற்கான நெறிமுறைகளின் செயல்திறனை சிறப்பாக ஒழுங்குபடுத்தும் வகையில் திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT