ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் அல் அதா விடுமுறை 4 நாளா? அல்லது 5 நாளா? எப்படி கணக்கிடப்படும்? எத்தனை நாட்கள் விடுமுறை..? தென்படவில்லை என்றால் எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்..?

Published: 6 Jun 2024, 9:15 AM |
Updated: 6 Jun 2024, 11:02 AM |
Posted By: admin

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடும் பண்டிகைத் திருநாளான ஈத் அல் அதாவுக்கான விடுமுறையானது இம்மாதத்தின் நடுப்பகுதியில் வருகிறது, ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பெரும்பாலான அரபு நாடுகளில் ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மேலும் இந்த பண்டிகைக்காக அமீரகத்தில் நீண்ட விடுமுறையும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

அமீரகத்தில் இஸ்லாத்தின் புனிதமான நாளான அரஃபா நாளுக்கு ஒரு நாள் விடுமுறையும், ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. பொதுவாக, இஸ்லாமிய பண்டிகைகள் பொதுவாக ஹிஜ்ரி நாட்காட்டி மாதங்களின்படி கணக்கிடப்படுகின்றன. எனவே பிறை பார்ப்பதைப் பொருத்தே தேதிகள் உறுதிப்படுத்தப்படும்.

இந்நிலையில், ஈத் அல் அதா கொண்டாடப்படும் ஹிஜ்ரி மாதம் துல் ஹஜ்ஜின் தொடக்கத்தை குறிக்கும் பிறையை இன்று ஜூன் 6ம் தேதி மாலை பார்க்குமாறு சவுதி அரேபியா நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இன்று பிறை தென்பட்டால் துல் ஹஜ் மாதம் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும், இல்லையெனில், நாளை மறுநாள் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும். இந்த இரண்டு சூழல்களில் ஈத் விடுமுறை எப்படி வழங்கப்படும் என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:

ADVERTISEMENT

ஜூன் 6 அன்று பின்று தென்பட்டால்:

இன்று ஜூன் 6ல் வானில் பிறை காட்சியளித்தால், துல் ஹஜ் மாதம் ஜூன் 7 அன்று தொடங்குகிறது. எனவே அரஃபா நாள் ஜூன் 15 (துல் ஹஜ் 9) அன்றும், ஈத் அல் அதா பண்டிகை ஜூன் 16 (துல் ஹஜ் 10) அன்றும் கொண்டாடப்படும். எனவே, ஜூன் 15, சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை என குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

ஜூன் 6 அன்று பிறை தென்படவில்லை என்றால்:

ஒருவேளை, ஜூன் 6 ஆன இன்று பிறை தென்படவில்லை என்றால், துல் ஹஜ் மாதம் ஜூன் 8 அன்று தொடங்குகிறது. எனவே, அரஃபா நாள் ஜூன் 16 (துல் ஹஜ் 9) அன்றும், ஈத் அல் அதா பண்டிகை ஜூன் 17 (துல் ஹிஜ்ஜா 10) அன்றும் கொண்டாடப்படும். எனவே, விடுமுறையானது ஜூன் 15, சனிக்கிழமை முதல் ஜூன் 19 புதன்கிழமை வரை என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

சாத்தியமான தேதிகள்

பெரும்பாலான வானியல் கணக்கீடுகள் ஜூன் 6 அன்று பிறையைக் காண வாய்ப்பில்லை என்று கூறுகின்றன. அப்படியானால், அமீரக குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையை பெற அதிகம் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஈத் அல் அதா பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணத் தேவை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணம் அதிகரித்து வருவதாகவும், சில இடங்களுக்கான விமானக் கட்டணங்கள் 64 சதவீதம் வரை அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் பயணச் செயலியான ‘Wego’ தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel