ADVERTISEMENT

UAE: ஒர்க் பெர்மிட்டை கேன்சல் செய்ய இனி ஆவணங்கள் தேவையில்லை.. செயலாக்க நேரமும் குறைப்பு..!!

Published: 8 Jul 2024, 8:01 PM |
Updated: 8 Jul 2024, 8:23 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தொழிலாளியின் பணி அனுமதியை ரத்து செய்வதற்கான செயல்முறையை அரசு தற்பொழுது எளிதாக்கியுள்ளது. அதாவது தொழிலாளியின் பணி அனுமதியை ரத்து செய்யும் செயல்முறையானது 3 நிமிடங்களுக்கு மாறாக வெறும் 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தொழிலாளர் சேவைகளுக்கான இந்த மேம்படுத்தப்பட்ட மற்றும் நெறிப்படுத்தப்பட்ட இந்த செயல்முறையானது, வேலைத் தொகுப்பு இயங்குதளத்தின் (work bundle platform) இரண்டாம் கட்டத் தொடக்கத்தைத் தொடர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக உரிமையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய ஊழியர்களை பணியமர்த்துவதையும் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கான பணி அனுமதிகளை முன் கூட்டியே புதுப்பித்தல் செய்வதற்குமான எளிதாக்கும் ஒரு தளத்தை தொடங்குவதற்கு பல அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்துள்ளனர்.

ADVERTISEMENT

work bundle platform என்று சொல்லக்கூடிய வேலை தொகுப்பின் முதல் கட்டம் கடந்த மார்ச் மாதம் துபாயில் முதன்முதலில் வெளியிடப்பட்டு, இப்போது ஏழு எமிரேட்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வேலைத் தொகுப்பின் இரண்டாம் கட்டமானது சுமார் 600,000 நிறுவனங்களையும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களையும் உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பின் இரண்டாம் கட்டமானது அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக இந்த சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே MoHRE அனைத்து ரத்து வகைகளையும் ஒரு ஒருங்கிணைந்த தொகுப்பாக மாற்றியுள்ளது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • தேவைப்படும் 2 ஆவணக் கோரிக்கைகளை நீக்கி ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்துதல்
  • தானியங்கி அனுமதியை இயக்குதல் (enabling automatic approval)
  • பிரிவுகளின் எண்ணிக்கையை 7லிருந்து 2 ஆகக் குறைத்தல்
  • செயலாக்க நேரத்தை 3 நிமிடங்களிலிருந்து வெறும் 45 வினாடிகளாக குறைத்தல்

இந்த எளிதாக்கப்பட்ட செயல்முறையின் மூலம் இனி பணி அனுமதியை ரத்து செய்வது சுலபமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸி விசாக்களைப் பெறுவதற்கான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான நேரம் 30 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த பணித் தொகுப்பின் கீழ் சேவைகள் 8 வேலை மற்றும் ரெசிடென்ஸி நடைமுறைகள் இப்போது ஒரே தளமாக குறைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பின் கீழ் வரும் செயல்முறைகள்

  • புதிய பணி அனுமதிப்பத்திரம் வழங்குதல்
  • நிலை சரிசெய்தலைக் கோருதல் (status adjustment)
  • விசா மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
  • எமிரேட்ஸ் ஐடி, குடியிருப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகள்
  • ஒரு தொழிலாளியின் வேலை ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
  • எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸியை புதுப்பித்தல்
  • மருத்துவ பரிசோதனை சேவைகள்
  • ஒரு தொழிலாளியின் வேலை ஒப்பந்தம், பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸியை ரத்து செய்தல்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel