ADVERTISEMENT

துபாய்: டிரைவிங் லைசென்ஸ் டெஸ்டில் ஃபெயில் ஆனவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பது தெரியுமா..?? எப்படி..??

Published: 11 Jul 2024, 8:38 AM |
Updated: 11 Jul 2024, 8:39 AM |
Posted By: admin

துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை முறையாக முடித்த பின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இறுதியாக நடத்தப்படும் சாலை தேர்வில் (road test) தோல்வியடைவது துபாயில் லைசென்ஸ் வாங்க விண்ணப்பித்தவர்களின் பலரது வாழ்வில் நடந்திருக்கும். அதிலும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால்  சில சமயங்களில் ஒரு நபர் தொடர்ந்து தோல்வியடைந்து 7, 8, 10 என பல முறை சாலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படும். இத்தனை முறை முயற்சி மேற்கொண்டும் தேர்ச்சி ஆகாமல் போனால் நமது பணம் போவது மட்டுமின்றி மனதிற்கும் பெரும் வருத்தமாக இருக்கும்.

ADVERTISEMENT

துபாய் எமிரேட்டில் ஓட்டுநர் வகுப்பு எடுக்கும் எவரும் உயர் தரநிலைகள் மற்றும் கடுமையான விதிகளை நன்கு அறிந்திருப்பார்கள். அதே நேரத்தில் பயிற்சி வகுப்புகளைக் கடந்து, தேர்வில் தேர்ச்சி பெற கடின உழைப்புடன் சோதனைகளை மேற்கொண்டு சாலை தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதியில் உரிமம் பெற்று விட்டால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் வழக்கமாக, ஒரு தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு, லைசென்ஸிற்கு விண்ணப்பித்தவர் மீண்டும் ஓட்டுநர் பள்ளிக்குச் சென்று கூடுதல் வகுப்புகளை முன்பதிவு செய்து மீண்டும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். இருந்தபோதிலும் நீங்கள் சாலை தேர்வில் ஃபெயில் ஆகி இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ADVERTISEMENT

அதாவது முடிவு சரியானதாக இல்லை என்று நீங்கள் கருதினால், உங்களின் முடிவை எதிர்த்து, ஆன்லைன் செயல்பாட்டில் மேல்முறையீட்டிற்கு வெறும் 5 நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம். எப்படி என்பது குறித்து கீழே காணலாம்.

  • ums.rta.ae என்ற வலைதளத்திற்கு சென்று உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் உள்நுழையவும்.
  • ‘Services’ என்பதை கிளிக் செய்து, ‘Driver and car owner services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பாப் அப் செய்யும் சேவைகளின் பட்டியலிலிருந்து, ‘Apply for Appealing for Road Test Results’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ‘Apply now’ பொத்தானைக் கிளிக் செய்து இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
  • கட்டணம் செலுத்த வேண்டும்
  • பின்னர் RTA விசாரணை நடத்தும்.
  • ஐந்து வேலை நாட்களுக்குள் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

கட்டணம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

மேல்முறையீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் சேவைக் கட்டணமாக 300 திர்ஹம்ஸ் மற்றும் ‘knowledge and innovation fees’ 20 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். விசாரணைக்குப் பிறகு, விண்ணப்பதாரரின் கருத்து சரியானதாகக் கருதப்பட்டால், சோதனை முடிவு மாற்றப்பட்டு கட்டணம் திரும்பப் பெறப்படும்.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், RTA இன் படி, இலகுரக வாகன சாலை சோதனை முடிவைப் பெற்ற இரண்டு வேலை நாட்களுக்குள் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel