ADVERTISEMENT

துபாய்க்கு பயணிக்கவுள்ளீர்களா..?? ஏர்போர்ட் டெர்மினல்களில் இருந்து கடைசி பயணங்கள் எப்போது தெரியுமா..??

Published: 13 Jul 2024, 1:57 PM |
Updated: 13 Jul 2024, 2:05 PM |
Posted By: admin

வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் நபர்கள் முழுக்க முழுக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த நினைத்தால் துபாய் மெட்ரோவானது அவர்களுக்கு சிறந்த தேர்வாகும். ஏர்போர்ட்டில் இருந்து துவங்கும் மெட்ரோ சேவையானது துபாயின் அனைத்து பகுதிகளுக்கும் தனது சேவையை இயக்கி வருகிறது. எனவே துபாய் ஏர்போர்ட்டில் வந்திறங்கும் நீங்கள் மெட்ரோவை பயன்படுத்த நினைத்தால், பொது போக்குவரத்தின் நேரத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஏர்போர்ட் டெர்மினல்கள் இருக்கும் துபாய் மெட்ரோவின் ரெட் லைன் திங்கள் முதல் வியாழன் வரை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்) இயங்கும். வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை, துபாய் மெட்ரோ காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இயங்கும்.

இருப்பினும், பொது விடுமுறை காரணமாக இந்த நேரங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறதா என்பதை முன்கூட்டியே சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இதனடிப்படையில் விமான நிலைய டெர்மினல்களில் இருந்து கடைசியாக இயக்கப்படும் மெட்ரோ பயணங்களின் நேரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெர்மினல் 1

எக்ஸ்போ 2020, UAE எக்ஸ்சேஞ்ச் செல்வதற்கான கடைசி பயண நேரம்

  • வார நாட்களில்: இரவு 10.58 மணி
  • வெள்ளிக்கிழமை: இரவு 11.58 மணி
  • சனிக்கிழமை: இரவு 10.59 மணி
  • ஞாயிறு: இரவு 10.59 மணி

சென்டர்பாய்ண்ட் செல்தற்கான கடைசி பயண நேரம்

ADVERTISEMENT
  • வார நாட்கள்: நள்ளிரவு 12 மணி
  • வெள்ளிக்கிழமை: நள்ளிரவு 12.48 மணி
  • சனிக்கிழமை: இரவு 11.59 மணி
  • ஞாயிறு: இரவு 11.59 மணி

டெர்மினல் 3

எக்ஸ்போ 2020, UAE எக்ஸ்சேஞ்ச் செல்வதற்கான கடைசி பயண நேரம்

  • வார நாட்களில்: இரவு 10.56 மணி
  • வெள்ளிக்கிழமை: இரவு 11.56 மணி
  • சனிக்கிழமை: இரவு 10.57 மணி
  • ஞாயிறு: இரவு 10.58 மணி

சென்டர்பாய்ண்ட் செல்தற்கான கடைசி பயண நேரம்

  • வார நாட்களில்: நள்ளிரவு 12.02 மணி
  • வெள்ளி: நள்ளிரவு 1.02 மணி
  • சனிக்கிழமை: நள்ளிரவு 12.01 மணி
  • ஞாயிறு: நள்ளிரவு 12.01 மணி

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel