ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான போக்குவரத்து விதிமீறல் புரியும் வாகன ஓட்டிகள் மீது பிளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படுவது பொதுவான நடைமுறையாகும். அதிகபட்சமாக 24 பிளாக் பாய்ண்ட்ஸ் பெறாத வரை வாகன ஓட்டிகள் ப்ளாக் பாய்ண்ட்ஸை தங்கள் டிரைவிங் லைசென்ஸை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த 24 பிளாக் பாய்ண்ட்ஸையும் ஒரு வாகன ஓட்டி கடுமையான போக்குவரத்து விதிமீறல் புரிந்து பெற்றால், அவர்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், ராஸ் அல் கைமா காவல்துறையானது, ஓட்டுநர்கள் அதிகபட்ச போக்குவரத்து ப்ளாக் பாய்ண்ட்ஸை பெற்றால் லைசென்ஸ் இடைநிறுத்தம், நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து கட்டாய பயிற்சி வகுப்புகள் போன்ற நிலைமைகளுக்கு தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது.
லைசென்ஸ் இடைநிறுத்தம்
ராஸ் அல் கைமா காவல்துறையின் கூற்றுப்படி, 24 கருப்பு புள்ளிகளைக் குவிக்கும் ஒரு வாகன ஓட்டி மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்வதன் மூலம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என கூறப்பட்டுள்ளது.
முதல் மீறல்
- ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பயிற்சிப் படிப்பை முடித்திருந்தால், ஓட்டுநர் இந்த இடைநீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்.
இரண்டாவது மீறல்
- ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும்.
- ஓட்டுநர் பெல்ஹாசா ஓட்டுநர் மையத்தில் பயிற்சி வகுப்பில் ஈடுபட வேண்டும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மூன்றாவது மீறல்
- ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்படும்.
- ஓட்டுநர் பெல்ஹாசா ஓட்டுநர் மையத்தில் பயிற்சி வகுப்பில் ஈடுபட வேண்டும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லைசென்ஸை ஒப்படைத்தல்
வாகன ஓட்டிகள் சில சமயங்களில் இந்த குற்றங்களுக்கு தங்கள் லைசென்ஸை ஒப்படைக்க வேண்டியிருக்கலாம். அவ்வாறு லைசென்ஸை ஒப்படைக்க தவறினால் நிதி அபராதமும் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைக்காததற்காக அபராதம்
- முதல் மீறல் – 1,000 திர்ஹம்ஸ்
- இரண்டாவது மீறல் – 2,000 திர்ஹம்ஸ்
- மூன்றாவது மீறல் – 3,000 திர்ஹம்ஸ்
ஓட்டுநர் தகுதிகாண் உரிமத்தைப் (probationary license) பெற்று, போக்குவரத்து புள்ளிகளின் ஒட்டுமொத்த வரம்பை அடைந்தால், அவர்கள் எதிர்கொள்ளும் அபராதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் கல்வி நிறுவனத்தில் பயிற்சிப் படிப்பை முடித்த ஓட்டுநர் இடைநீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்.
- தகுதிகாண் காலத்தின் போது அதிகபட்ச போக்குவரத்து புள்ளிகளை இரண்டாவது முறையாக அடைந்தால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் மற்றும் உரிமம் ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் கடக்கும் வரை ஓட்டுநர் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel