ஒரு நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு பயணிக்கவிருக்கும் நீங்கள் உங்களின் டிக்கெட்டினை ஐக்கிய அரபு அமீரகம் வழியாக செல்லுமாறு பெற்றிருந்தால் அமீரக விமான நிலையத்தில் ‘ஸ்டாப் ஓவர்’ என சொல்லக்கூடிய குறுகிய கால நேரத்திற்கு அமீரகத்தில் தங்கியிருந்து பின் மற்றொரு விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நேரமானது 6 மணி நேரம், 10 மணி நேரம் அல்லது 24 மணி நேரமாக கூட இருக்கலாம். இந்த சமயத்தில் மணிக்கணக்கில் விமான நிலையத்திலேயே அடுத்த விமானத்திற்காக காத்திருப்பது சோர்வையும் எரிச்சலையும் உண்டாக்கக்கூடும்.
அதே நேரம் நீங்கள் அமீரக டிரான்ஸிட் விசாவைப் பெற்றிருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் விமான நிலையத்திலேயே இருக்க வேண்டிய அவசியமின்றி அடுத்த விமானத்திற்கான நேரம் வரும் வரை அமீரகத்தை சுற்றிப் பார்க்க விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம். இருப்பினும் உங்களின் லக்கேஜ்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள விமான நிலையங்கள் லக்கேஜ் சேமிப்பு வசதிகள் அல்லது லாக்கர்களை வழங்குகின்றன. அதை நீங்கள் உங்கள் லக்கேஜ்களை பாதுகாக்க பயன்படுத்தலாம்.
துபாய் சர்வதேச விமான நிலையம்
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 1, 2 மற்றும் 3 இல் லக்கேஜ் சேமிப்பு வசதிகள் உள்ளன. அவை 24/7 என எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கும். dubaiairports.ae இன் படி, லக்கேஜ்களின் அளவைப் பொறுத்து நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டெர்மினல் 1
- நிலையான அளவிலான லக்கேஜ்களுக்கு (அதிகபட்ச அளவானது 21x24x11 என இருந்தால்) 12 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 40 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்
- நிலையான அளவில் இல்லாத லக்கேஜ்கள் அல்லது பெரிய அளவில் லக்கேஜ் இருந்தால் (21x24x11 அளவை விட பெரியது) 12 மணி அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 50 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.
இடம்: Dnata பேக்கேஜ் சேவைகள், அரைவல் நிலை (Dnata Baggage Services, Arrival level)
டெர்மினல் 2
- நிலையான அளவிலான லக்கேஜ்களுக்கு (அதிகபட்ச அளவானது 21x24x11 என இருந்தால்) 12 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 40 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்
- நிலையான அளவில் இல்லாத லக்கேஜ்கள் அல்லது பெரிய அளவில் லக்கேஜ் இருந்தால் (21x24x11 அளவை விட பெரியது) 12 மணி அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 50 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.
இடம்: Dnata பேக்கேஜ் சேவைகள், அரைவல் நிலை (Dnata Baggage Services, Arrival level)
டெர்மினல் 3
- நிலையான அளவிலான லக்கேஜ்களுக்கு (அதிகபட்ச அளவானது 21x24x11 என இருந்தால்) 12 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 35 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்
- நிலையான அளவில் இல்லாத லக்கேஜ்கள் அல்லது பெரிய அளவில் லக்கேஜ் இருந்தால் (21x24x11 அளவை விட பெரியது) 12 மணி அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு 40 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.
இடம்: Emirates Left Luggage, Arrival level, near Exit 1.
சையத் சர்வதேச விமான நிலையம்
அபுதாபியிலும், பஸ் ஷட்டில் பகுதிக்கு அருகில் உள்ள ‘எக்ஸ்ஸஸ் பேக்கேஜ் (excess baggage)’ நிறுவன தளத்தில் உங்கள் லக்கேஜ்களை விட்டுச் செல்லலாம். லக்கேஜ்களுக்கான கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை
- மூன்று மணிநேரம் வரை லக்கேஜ்களை சேமித்து வைப்பதற்கு 35 திர்ஹம்ஸ்.
- 12 மணி நேரம் வரை லக்கேஜ்களை சேமித்து வைப்பதற்கு 55 திர்ஹம்ஸ்.
- 24 மணிநேரம் வரை லக்கேஜ்களை சேமித்து வைக்க 75 திர்ஹம்ஸ்.
- 48 மணிநேரம் வரை லக்கேஜ்களை சேமித்து வைப்பதற்கு 105 திர்ஹம்ஸ்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel