துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து திறனை மேம்படுத்தவும் பயண நேரத்தை குறைக்கவும் இத்தகைய பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டு பணிகளால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் மற்றும் மாற்றுப் பாதைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போலவே துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் எமிரேட்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என பயணிகளை எச்சரித்துள்ளது.
இது குறித்து RTA, அதன் சமூக ஊடகங்களில், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை, அபுதாபியை நோக்கிய ஹத்தா சாலை மற்றும் அல் அய்ன் சாலையின் இன்டர்செக்ஷனுக்கு இடையில் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு, அவர்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய, முன்னதாகவே புறப்பட்டுச் செல்லுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel