ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் துவங்கப்பட்டுள்ள புதிய பேக்கேஜ் சர்வீஸ் சென்டர்.. பயணிகளுக்கு வழங்கும் 3 சேவைகள் என்ன..??

Published: 1 Aug 2024, 4:38 PM |
Updated: 1 Aug 2024, 4:43 PM |
Posted By: admin

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 2ல் புதிய பேக்கேஜ் சர்வீஸ் சென்டர் தொடங்கப்பட்டுள்ளதாக துபாய் ஏர்போர்ட்ஸ் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த புதிய வசதியானது லக்கேஜ்களை பயணிகள் விமான நிலையத்தில் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் விட்டுச் சென்று, அதை பின்னர் சேகரிக்கும் லக்கேஜ்களையும் தவறாக கையாளப்பட்ட லக்கேஜ் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் “இப்போது திறக்கப்பட்டுள்ள பேக்கேஜ் சர்வீஸ் சென்டர் என்பது லக்கேஜ்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான ஒரு பிரத்யேக இடமாகும். இது பயணிகள் தங்கள் லக்கேஜ்களை 24 மணி நேரமும் எளிதாக சேமித்து திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பேக்கேஜ் சர்வீஸ் சென்டரானது 24/7 என எல்லா நேரமும் இயங்குகிறது என்றும் லக்கேஜ்களை எளிதாக சேமிப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது பொதுவாக அணுகக்கூடிய பகுதிகளை டெர்மினலின் பாதுகாப்பான பிரிவுகளுடன் இணைக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், கூடுதல் பாதுகாப்புத் சோதனை (security screening) இல்லாமல் எளிதான லக்கேஜ் சேகரிப்பை இந்த சென்டர் அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பேக்கேஜ் சர்வீஸ் சென்டரானது 3 வழிகளில் பயணிகளுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

  • பயணிகளின் லக்கேஜ் தொலைந்து விட்டால் இந்த சர்வீஸ் சென்டருக்கு வந்து லக்கேஜ் டேக் (luggage tag) மற்றும் அதன் விபரங்களை கூறினால் 5 நிமிடங்களில் அதனை கண்டுபிடிக்கும் வாய்ப்பைப் பெறலாம்
  • ஒருவேளை லக்கேஜ் பேக் உடைந்திருந்தால் இங்கு வந்து அதற்கு பதிலாக புதிய லக்கேஜ் பேக்-ஐ பெற்றுக்கொள்ளலாம்
  • பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்கு முன் விமான நிலையத்தை விட்டு வெளியேற நினைத்தால் இங்கு வந்து அவர்களின் லக்கேஜை பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம்

இவை தவிர இந்த வசதியானது செயல் திறனை மேம்படுத்தவும் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சேவையின் துவக்கமானது துபாய் விமான நிலையங்கள் மற்றும் துபாய் போலீஸ், துபாய் சுங்கம் மற்றும் dnata உள்ளிட்ட அதன் சேவைப் பங்காளிகளுக்கு இடையே உள்ள வலுவான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel