ADVERTISEMENT

UAE: டிரக் டிரைவர்களுக்கான மல்டிபிள் என்ட்ரி விசா.. கட்டணம், தேவையான ஆவணங்கள் என்னென்ன..??

Published: 1 Aug 2024, 7:01 PM |
Updated: 1 Aug 2024, 7:04 PM |
Posted By: admin

நீங்கள் வளைகுடா நாடுகளில் தொழில் புரிபவரா அல்லது டிரக் ஓட்டுநராக பணிபுரியும் நபரா.?? உங்கள் நிறுவனம் அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக சரக்குகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடிக்கடி கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதா..?? அவ்வாறு வேலையின் நிமித்தமாக நீங்கள் பலமுறை அமீரகத்திற்குள் நுழைய வேண்டுமா..??

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாள மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளத்தின்படி, டிரக் ஓட்டுநர்கள் 30 நாட்கள், 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் மல்டி என்ட்ரி விசாவைப் பெறலாம். டிரக் ஓட்டுநர்களுக்கான மல்டி என்ட்ரி விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய வழிகாட்டி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் படிகள்

மல்டி என்ட்ரி விசாவிற்கான விண்ணப்பத்தை இணையதளம், மொபைல் அப்ளிகேஷன், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் அல்லது டைப்பிங் சென்டர் மூலம் பூர்த்தி செய்யலாம்.

ADVERTISEMENT

இணையதளம்/மொபைல்

  • ICP இணையதளம் அல்லது அப்ளிகேஷனை திறக்கவும்
  • ‘Public services’ என்பதைக் கிளிக் செய்து, ‘Truck drivers’ பகுதிக்குச் செல்லவும்
  • உங்கள் அக்கவுண்ட் அல்லது UAE PASS மூலம் உள்நுழையவும்
  • தேவைப்படும் விசாவில் கிளிக் செய்து, ‘start sevice’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கட்டணத்தை செலுத்தவும்.

சேவை மையங்கள்

  • அருகிலுள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் அல்லது அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மையத்தைப் பார்வையிடவும்.
  • விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை ஊழியரிடம் சமர்ப்பிக்கவும்.
  • இறுதியா கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • தங்கியிருக்கும் காலத்தை உள்ளடக்கிய சுகாதார காப்பீடு விசா
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் நகல்
  • வண்ண புகைப்படம்
  • ஓட்டுநரின் ஸ்பான்சரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் (விரும்பினால்)
  • டிரக் ஒரே ஸ்பான்சருக்கு சொந்தமில்லை என்றால் பவர் ஆஃப் அட்டர்னியின் சான்றளிக்கப்பட்ட நகல் (விரும்பினால்)

கட்டணம்

  • கோரிக்கை கட்டணம் – 100 திர்ஹம்ஸ்
  • வழங்கல் கட்டணம் – 200 திர்ஹம்ஸ் (30 நாள் விசாவிற்கு), 400 திர்ஹம்ஸ் (60 நாள் விசாவிற்கு), 600 திர்ஹம்ஸ் (90 நாள் விசாவிற்கு)
  • பாதுகாப்பு வைப்பு கட்டணம் – 2,025 திர்ஹம்ஸ்
  • இ-சேவை கட்டணம் – 28 திர்ஹம்ஸ்
  • ICP கட்டணம் – 22 திர்ஹம்ஸ்
  • ஸ்மார்ட் சேவை கட்டணம் – 100 திர்ஹம்ஸ்
  • விசா காப்பீட்டு கட்டணம் – 60 திர்ஹம்ஸ் (30 நாள் விசாவிற்கு), 80 திர்ஹம்ஸ்(60 நாள் விசாவிற்கு), 100 திர்ஹம்ஸ் (90 நாள் விசாவிற்கு)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel