ADVERTISEMENT

தந்தையின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டினரின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற கூடாது.. புதிய விதியை அறிவித்துள்ள குவைத் அரசு..!!

Published: 3 Aug 2024, 4:17 PM |
Updated: 3 Aug 2024, 4:27 PM |
Posted By: admin

அதிகளவு வெளிநாட்டவர்கள் வசிக்கக்கூடிய வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வெளிநாட்டவர்களின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குவைத் ஊடக அறிக்கையின்படி, குவைத் அதிகாரிகள், வெளிநாட்டவர்களின் குழந்தைகள் தங்கள் தந்தையிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்ற ஆணையை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஸ்போர்ட் இயக்குநரகம் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்துறை அமைச்சகம் குவைத்தின் அனைத்து புறப்படும் விமான நிலையங்களிலும் இந்த நடவடிக்கையை அமல்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திருமண தகராறுகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சனைகளைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் எனவும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய ஒரு அறிக்கையில் “தந்தை தனது குழந்தைகளுக்கு நாட்டிற்குள் ஸ்பான்சராக இருக்கும் பட்சத்தில், திருமண பிரச்சனைகள் அல்லது பிற காரணங்களுக்காக தாயுடன் சென்ற குழந்தைகள் குவைத்திற்கு திரும்பாமல் இருத்தல் உள்ளிட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக தந்தையின் ஒப்புதல் இல்லாமல் குழந்தைகள் தங்கள் தாயுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஸ்போர்ட் துறையால் வழங்கப்படும் இந்த அறிக்கையில் ஸ்பான்சர் செய்யும் நபரின் ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் குழந்தைகள் தந்தையின் காவலில் இருக்கும் போது சட்டத்தை மீறி தந்தைக்கு தெரியாமல் தாயுடன் பயணம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் நிகழ்வுகள் நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.8 மில்லியனில் 3.3 மில்லியன் வெளிநாட்டினர் உள்ளனர். இதில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel