கடந்த ஆறு மாதங்களில், துபாயில் 94 போக்குவரத்து விபத்துக்கள் பொது போக்குவரத்து துறையின் புள்ளிவிவரத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் துபாய் வாகன ஓட்டிகள் பதிவு செய்த முக்கிய விதிமீறல்கள் சிலவற்றில் ஆபத்தான முறையில் ரிவர்ஸ் செய்தல், போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக வாகனம் ஓட்டுதல் மற்றும் கட்டாய பாதைகளை கடைபிடிக்காதது ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் துபாயில் பதிவான 94 விபத்துகளில், 64 விபத்துகள் வாகன ஓட்டிகள் கட்டாய பாதைகளை கடைபிடிக்காததால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து செல்லும் பாதைக்கு எதிராக வாகனங்களை ஓட்டியதால், 14 சாலை விபத்துகள் ஏற்பட்டன என தகவல் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, சில ஓட்டுநர்கள் கட்டாயப் பாதைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால், ஆபத்தான முறையில் பின்னோக்கிச் செல்வதன் மூலம் 16 விபத்துக்கள் ஏற்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துகளின் புள்ளிவிபரங்களைத் தொடர்ந்து துபாய் வாகன ஓட்டிகள் கூட்டாட்சி போக்குவரத்து மற்றும் போக்குவரத்து சட்டத்தை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு, போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 600 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படும் என்றும் ஆபத்தான முறையில் ரிவர்ஸ் சென்றால் 500 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
#News | Dubai Police Record 94 Accidents Due to Lane Indiscipline and Dangerous Driving
Details:https://t.co/OCVA8jcqhT#YourSecurityOurHappiness#SmartSecureTogether pic.twitter.com/ALRC96czkQ
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) August 4, 2024
அதுமட்டுமல்லாமல் இலகுரக வாகனங்களுக்கான கட்டாய பாதைகளை கடைபிடிக்காத ஓட்டுநர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து விதிமீறல்கள் சிறியவை என்று சிலர் தவறாக நம்புவதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் துயரமான விபத்துக்கள் ஏற்படலாம் என்று துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் கூறியுள்ளார். “சில வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களின் தீவிரத்தன்மை குறித்து விழிப்புணர்வு இல்லாததால் பலர் மற்றவர்களின் தவறுகளுக்கு பலியாகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, 177 போக்குவரத்து விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 113 கட்டாய பாதைகளை கடைபிடிக்காததால் ஏற்பட்டவை என்றும போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக வாகனம் ஓட்டியதால் 28 விபத்துகள் ஏற்பட்டன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel