ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் கடும் வெயிலுக்கு மத்தியில் ஒரு சில இடங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்த நிலையில் இன்று ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
இன்று (திங்கள்கிழமை) துபாய்-அல் அய்ன் சாலையில் இந்த ஆலங்கட்டி மற்றும் பலத்த மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் ஆலங்கட்டிகளைப் பிடித்து மழை மற்றும் குளிர்ந்த வெப்பநிலையை வரவேற்றனர்.
View this post on Instagram
மேலும் அல் அய்ன், மசகின் ஆகிய பகுதிகளிலும் லேசான ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தூசி, காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் வெப்பச்சலன மேகங்கள் மற்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் தூசி வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்துடன் வீசக்கூடிய காற்றின் காரணமாக, சில உள் பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலை 3,000 மீட்டருக்கும் குறைவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வானிலையானது மாலை 3.23 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. NCM இன் கூற்றுப்படி, இன்று (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 8 வியாழன் வரை அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel