ADVERTISEMENT

துபாயின் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என RTA அறிவிப்பு..!!

Published: 10 Aug 2024, 2:51 PM |
Updated: 10 Aug 2024, 2:53 PM |
Posted By: admin

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (ஆகஸ்ட் 10 சனிக்கிழமை) ஜுமைரா ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து தாமதம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்தான சமூக ஊடகப் பதிவில், இன்று பிற்பகல் 2 மணி முதல் ஆகஸ்ட் 12 திங்கட்கிழமை காலை 5 மணி வரை இந்த பகுதியில் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அல் மனாரா ஸ்ட்ரீம் மற்றும் உம் அல் ஷீஃப் சாலை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த போக்குவரத்து தாமதம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை இரு திசைகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 19, 2024 வரை அல் மனாரா ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன் மற்றும் அல் தான்யா ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன் ஆகிய இரு திசைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் மெர்காடோவிற்கு அருகிலுள்ள பகுதியில் ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26, 2024 வரை இரு திசைகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து அடையாளங்களைப் பின்பற்றி மாற்று வழிகளில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT