ADVERTISEMENT

அமீரகத்தில் ‘ப்ளூ காலர்’ தொழிலாளர்களும் இனி வங்கியில் கடன் பெறலாம்.. ‘மைக்ரோ-லோன்’ திட்டத்தை கொண்டு வரும் அமீரக வங்கிகள்..!!

Published: 13 Aug 2024, 6:25 PM |
Updated: 13 Aug 2024, 6:25 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கும் குறுகிய கால கடன்களை வழங்கும் ‘மைக்ரோ-ஃபைனான்ஸ்’ முயற்சியானது அமீரகத்தில் உள்ள வங்கிகளால் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அவசரகாலத்தின் போது ப்ளூ காலர் தொழிலாளர்களின் நிதி உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த மைக்ரோ-ஃபைனான்ஸ் முயற்சி உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், கடன் வாங்கியவர்கள் அதை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை உறுதிப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முயற்சியில் ராஸ் அல் கைமாவின் RAKBank, மைக்ரோ-ஃபைனான்ஸ் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RAKBank ன் படி, குறைந்தபட்ச சம்பள வரம்பு Dh750 முதல் Dh4,500 வரை உள்ள வாடிக்கையாளர்களுக்கு இதன் கீழ் கடன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது பற்றி RAKBank இன் CEO ரஹீல் அகமது கூறுகையில், எங்களின் ப்ளூ காலர் வாடிக்கையாளர்கள் தங்கள் அவசரத் தேவைகளை நிர்வகிப்பதற்குப் பயன்படுத்துவதற்காக, தங்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை அதிகபட்சமாக 1,500 திர்ஹம் வரை கடனாகப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிதியானது பின்னர் சம்பள கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதாவது, குறைந்த சம்பளம் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்பனமாக அளிக்கப்படும் மைக்ரோ-லோன் எனும் கடனானது, தனிநபரின் சம்பளக் கணக்கிலிருந்து அடுத்த சம்பளக் கிரெடிட்டில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் தனியாரிடம் வாங்கும் கடன்களுக்கு வட்டியுடன் செலுத்த வேண்டிய தொகையுடன் ஒப்பிடுகையில், அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் உள்ள மற்ற சில வங்கிகளும் இந்த மைக்ரோ-லோன் வாய்ப்புகள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. அமீரகத்தில் பல தசாப்தங்களாக, ஒயிட் காலர் தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலக் கடன்கள் மற்றும் தனிப்பட்ட கடன்கள் வழங்குவதிலேயே நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் கவனம் செலுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது இந்த கடன் வசதியானது இப்போது மாறி வருகிறது. அதேபோன்று ப்ளூ காலர் தொழிலாளர்களின் உடனடி தேவைக்கான நிதி செலுத்தப்படுவதோடு, இந்த முயற்சியின் கீழ் ப்ரீலேன்சர் உள்ளிட்ட மற்ற வகை தொழில் வல்லுநர்களுக்கும் கடன் வசதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel