ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று ஏற்பட்ட சிறிய நில நடுக்கம்.. அதிர்வுகளை உணர்ந்த குடியிருப்பாளர்கள்..!!

Published: 18 Aug 2024, 2:17 PM |
Updated: 18 Aug 2024, 2:19 PM |
Posted By: admin

ஓமான் கடலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டதைத் தொடர்ந்து அமீரகத்திலும் இதன் அதிர்வுகள் இன்று உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, (ஆகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையமானது (NCM) அமீரகத்தில் நில அதிர்வுகளை உணர்ந்ததாக கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மதியம் 12.14 மணியளவில் திப்பா கடற்கரை அருகே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை NCM உறுதிப்படுத்தியுள்ளது.

இதே போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூன் 8 அன்று மசாபியில் இரவு 11.01 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அத்துடன் கடந்த மே 29 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ஓமான் கடலைத் தாக்கிய சிறிய நிலநடுக்கங்களின் காரணமாக நில அதிர்வுகளை அனுபவித்தனர்.

ADVERTISEMENT

இது போல ஐக்கிய அரபு அமீரகம் அவ்வப்போது நில நடுக்கங்களை உணர்ந்தாலும், நிலநடுக்கவியல் நிபுணர்கள், அமீரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT