ADVERTISEMENT

UAE: செப்.1 முதல் அனைத்து வகையான விசாக்களுக்கும் பொது மன்னிப்பு பொருந்தும்..!! தெளிவுபடுத்திய ICP..!!

Published: 28 Aug 2024, 7:54 PM |
Updated: 28 Aug 2024, 7:54 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் இரண்டு மாத பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக எந்தத் தடையும் விதிக்கப்படாது, அபராதமும் விதிக்கப்படாது என்று அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் (ICP) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த பொது மன்னிப்பு திட்டமானது சுற்றுலா மற்றும் காலாவதியான ரெசிடன்ஸி விசாக்கள் உட்பட அனைத்து வகையான விசாக்களையும் உள்ளடக்கியது என்றும் ICP தெளிவுபடுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் எந்த ஆவணங்களும் இல்லாமல் பிறந்தவர்களும் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி தங்கள் நிலையை சரிசெய்யலாம் என்பதையும் ICP தெரிவித்துள்ளது.

எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தங்களுடைய ரெசிடன்ஸி நிலையை முறைப்படுத்தவோ அல்லது அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேறவோ இது சிறந்த வாய்ப்பாகும், நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்கள் எந்த நேரத்திலும் உரிமையுடன் திரும்பலாம், நாட்டில் அதிக காலம் தங்கியிருந்ததற்காக அபராதம் அல்லது வெளியேறும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் ICP மேலும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த பொது மன்னிப்பானது 2007 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வழங்கப்படும் நான்காவது பொது மன்னிப்பு திட்டமாகும். இதற்கு முன்பாக ஆகஸ்ட் 1, 2018 முதல் அக்டோபர் 31, 2018 வரை 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த ஆண்டு டிசம்பர் 31 வரை பொது மன்னிப்பு திட்டத்தை அமீரக அரசு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT