ADVERTISEMENT

UAE: புத்தாண்டு வான வேடிக்கையில் மீண்டும் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள அபுதாபி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Published: 28 Dec 2024, 8:13 AM |
Updated: 28 Dec 2024, 8:21 AM |
Posted By: admin

வரவிருக்கும் புத்தாண்டிற்கு அமீரகம் முழுவதும் வான வேடிக்கைகள் நடத்தப்படவிருக்கும் நிலையில், அபுதாபி புத்தாண்டு தினத்தன்று அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சியை 50 நிமிட காட்சியுடன் நடத்தி கின்னஸ் சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களுக்கும் மேலாக வான்வழி கலையை உருவாக்கும் 6,000-ட்ரோன் நிகழ்ச்சியை உள்ளடக்கிய கொண்டாட்டங்களுக்காக ஆறு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் வானவேடிக்கை காட்சி 40 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் அளவு, நேரம் மற்றும் உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்தது. மேலும், 5,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழி காட்சியானது மற்றொரு கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை, ஒவ்வொரு மணி நேரமும் மாலை 6 மணி முதல் வாணவேடிக்கைகள் தொடங்கும் என்றும், இறுதியாக நள்ளிரவில் கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லேசர் நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இதில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் யாஸ் தீவில் உள்ள யாஸ் பே பகுதியில் இரவு 9 மணிக்கும் நள்ளிரவுக்கும் இரண்டு வானவேடிக்கைகளை நடத்தும். மேலும், அபுதாபியின் பிரபலமான இடமான கார்னிச் பகுதியிலும் வான வேடிக்கை காட்சிகள் நடத்தப்படும். அதே போல் லிவா சர்வதேச திருவிழா கண்கவர் பட்டாசுகளுடன், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நிகழ்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அல் தஃப்ராவின் மற்ற இடங்களான மதீனத் சயீத், கயாதியில் உள்ள பொதுப் பூங்கா மற்றும் அல் மர்ஃபாவில் உள்ள அல் முகிரா கடற்கரை போன்ற இடங்களிலும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.

ADVERTISEMENT

அபுதாபியில் வான வேடிக்கை நிகழவிருக்கும் மற்ற இடங்கள்

  • அல் அய்னில் உள்ள ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியம்
  • லிவா ஃபெஸ்டிவல், அல் தஃப்ரா
  • பொது பூங்கா, மதீனத் சயீத், அல் தஃப்ரா •
  • கயாதி, அல் தஃப்ரா (டாம் மையத்திற்குப் பின்னால்)
  • அல் முகீரா கடற்கரை, அல் மர்ஃபா, அல் தஃப்ரா

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel