ADVERTISEMENT

துபாய்: ஊழியர்களுக்கு 150 மில்லியன் திர்ஹம்ஸ் போனஸ் வழங்கிய இந்திய நிறுவனம்..!!

Published: 8 Jan 2025, 6:05 PM |
Updated: 8 Jan 2025, 6:20 PM |
Posted By: Menaka

துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனம் அதன் ஊக்கத் திட்டங்களின் (incentive programme) கீழ் வராத ஊழியர்களுக்கு சுமார் 150 மில்லியன் திர்ஹம்ஸ் போனஸ் வழங்கியதாக இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின்படி துபாயில் உள்ள இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ‘Sobha Group’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2024 டிசம்பரில் போனஸ் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது, இதனால் இந்நிறுவனத்தின் பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயனடைந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சோபா குழுமத்தின் தலைவர் ரவி மேனன் அவர்கள் கூறுகையில், இந்த போனஸ், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்கள் திறமை, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் பங்களித்த விதிவிலக்கான தனிநபர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, “இந்த சிறப்பு போனஸ் எங்கள் ஊழியர்கள் காட்டிய உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும், குறிப்பாக கடந்த ஆண்டில் எல்லைகளைத் தாண்டி அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து Bayt.com ஆல் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கணக்கெடுப்பில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் உள்ள 77 சதவீத ஊழியர்கள் போனஸ் அல்லது கூடுதல் நேர வேலை ஊதியம் போன்ற பணப் பலன்களைப் பெறுவதாக தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் இந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு போனஸ் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel