ADVERTISEMENT

UAE: ரமலான் பிறையை நாளை பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிறை பார்க்கும் கமிட்டி..!!

Published: 27 Feb 2025, 8:18 AM |
Updated: 27 Feb 2025, 8:20 AM |
Posted By: admin

ரமலான் மாதம் துவங்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் இஸ்லாமிய சமூகத்தினர் புனித ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவைக் காண்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் வெள்ளிக்கிழமை மாலை பிறையை எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரி காலண்டரில் இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் வரை நீடிக்கும். அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 28 அன்று வெறும் கண்ணிலோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ பிறையை பார்க்கும் எவரும் அதனை அரசிற்கு தெரியப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி எமிரேட்ஸ் ஃபத்வா கவுன்சிலுடன் இணைந்த பிறை பார்க்கும் குழு, நாட்டில் பிறை நிலவைப் பார்ப்பதற்கான கவுன்சிலின் ஆணையின் அடிப்படையில், பிறையைக் காணும் எவரும் அதை 027774647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது https://forms.office.com/r/CwAUg1buUP என்ற இணைப்பில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

வானியல் கணக்கீடுகளின் படி, அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ரமலான் பிறை பிப்ரவரி 28, 2025 அன்று காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிறை தென்பட்டால் தற்போதைய ஷாபான் மாதத்தின் 29ஆம் தேதியை அடுத்து மார்ச் 1 ம் தேதி ரமலான் மாதம் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தை போன்றே, சவூதி அரேபியாவிலும் இருக்கக்கூடிய பிறை பார்க்கும் குழு, பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை மாலை ரமலான் பிறையைப் பார்க்கலாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel