ADVERTISEMENT

அமீரகத்தில் தொடங்கிய ரமலான்.. துபாயில் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன.?? முழுத் தகவல்கள் இதோ..!!

Published: 1 Mar 2025, 11:44 AM |
Updated: 1 Mar 2025, 12:13 PM |
Posted By: admin

இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் இன்று மார்ச் 1 ஆம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கிவிட்டது. இந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் மாதம் முழுவதும் நோன்பு, சிறப்பு தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல், சுய ஒழுக்கம் பேணுதல் போன்ற இறை வணக்கங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

ADVERTISEMENT

குறிப்பாக ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு கடைபிடிப்பார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலானின் முதல் நாளில் நோன்பு நேரம் 12 மணிநேரம் 58 நிமிடங்கள் இருக்கும். அதுவே மாதத்தின் கடைசி நாளில் ரமலான் நோன்பின் நேரம் 13 மணி 41 நிமிடங்கள் வரை அதிகரிக்கும்.

எனவே, புனித மாதத்தின் நடைமுறைகளுக்கு இணங்குவதற்காக அமீரக குடியிருப்பாளர்களுக்கான தினசரி நடைமுறைகள் மாறுபடும். அதாவது, அலுவலகங்களில் குறைக்கப்பட்ட வேலை நேரம், பள்ளிகளின் நேரங்களில் மாற்றம், பார்க்கிங் விதிமுறைகள் மற்றும் பிற பொது சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் போது, அனைத்து எமிரேட்களிலும் மாற்றப்பட்ட நேரங்கள் அறிவிக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு புனித மாதத்திற்கான பார்க்கிங் மற்றும் இலவச சாலிக் உள்ளிட்ட மாற்றியமைக்கப்பட்ட நேரங்கள் மற்றும் சேவைகளின் முழுவிபரங்களையும் எமிரேட் வாரியாக பின்வருமாறு பார்க்கலாம்.

துபாய் மெட்ரோ

RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன் வழித்தடங்கள் திங்கள் முதல் வியாழன் வரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சாலிக் கட்டணங்கள்

>> வார நாட்களில் போக்குவரத்து உச்ச நேரங்களான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 திர்ஹம்ஸ் மற்றும் நெரிசல் இல்லாத நேரங்களான காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் மறுநாள் 2 மணி வரை 4 திர்ஹம்ஸ் ஆக இருக்கும்.

>> அதேபோல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை கட்டணம் இலவசம். ஞாயிற்றுக்கிழமைகளில், கட்டணம் நாள் முழுவதும் காலை 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 4 திர்ஹம்ஸ் ஆக இருக்கும்; மற்றும் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக கடக்கலாம்.

கட்டண பொது பார்க்கிங் நேரங்கள்:

  • துபாயில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8 மணி – மாலை 6 மணி மற்றும்இரவு 8 மணி முதல் 12 நள்ளிரவு வரை
  • திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பார்க்கிங் இலவசம்
  • மல்டி லெவல் பார்க்கிங் கட்டிடங்கள் 24/7 நேரமும் கட்டணத்தில் இயங்கும்.

அலுவலக வேலை நேரம்:

அரசுத் துறை ஊழியர்கள்: அமீரக அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளுக்கான வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இருக்கும், வெள்ளிக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வேலை நீடிக்கும். அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் 70% ஊழியர்களுக்கு தொலைதூர வேலை அனுமதிக்கப்படுகிறது.

தனியார் துறை ஊழியர்கள்:  புனித மாதத்தில் அவர்களின் வேலை நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் பணியின் தேவைகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப, நிறுவனங்கள் ரமலான் மாதத்தில் தினசரி வேலை நேரங்களுக்குள் நெகிழ்வான அல்லது தொலைதூர வேலை முறைகளை செயல்படுத்தலாம் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பள்ளி அட்டவணையில் சில மாற்றங்கள்:

பொதுப் பள்ளிகள்: ரமலான் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு தொலைதூரக் கற்றலுக்கான ஒரு நாளாக UAE கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமைகளில் தேர்வு அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு இது பொருந்தாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள்: துபாயில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் புனித மாதத்தின் போது வெள்ளிக்கிழமைகளில் தொலைதூர கற்றலை தேர்வு செய்யலாம். இருப்பினும், வெள்ளிக்கிழமைகளில் தேர்வுகள் உள்ள மாணவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

பொதுப் பூங்கா நேரங்கள்:

துபாயின் பொது பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் செயல்படும் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட அட்டவணை இங்கே:

  • ஜபீல் பூங்கா: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
  • அல் கோர் பூங்கா: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
  • முஷ்ரிஃப் தேசிய பூங்கா: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
  • சஃபா பூங்கா: மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை
  • மம்சார் பூங்கா: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
  • சில்ட்ரென்ஸ் சிட்டி: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
  • முஷ்ரிஃப் தேசிய பூங்காவின் மலை பைக் பாதை & ஹைக்கிங் பாதை: காலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை
  • குர்ஆன் பூங்கா: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
  • கேவ் அண்ட் கிளாஸ் ஹவுஸ்: மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை

சுற்றுலா இடங்கள்:

  • துபாய் பார்க்: காலை 8 மணி முதல் நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும். நடைபாதைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு வாயில்கள் திறக்கப்படும்.
  • அல் மர்மூம் ஏரிகள் (லவ், எக்ஸ்போ, சோலார், கிரசண்ட் மூன் ஏரி) மற்றும் சுஹைலா ஏரிகள்: இவை வாரத்தின் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
  • துபாய் ஃபிரேம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
  • குளோபல் வில்லேஜ்: துபாயின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமான குளோபல் வில்லேஜ்ஜூம் அதன் இயக்க நேரங்களை நீட்டித்துள்ளது. ஞாயிறு முதல் புதன் வரை மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ரமலான் காலத்தில் பெற வேண்டிய அனுமதிகள்:

ரமலான் மாதத்தில் உணவு சமைப்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் உணவகங்கள் அனுமதி பெறலாம். நள்ளிரவுக்குப் பிறகு வணிகங்கள் செயல்படுவதற்கான விண்ணப்பங்களை முனிசிபாலிட்டி ஏற்கத் தொடங்கியுள்ளது.

முக்கிய விதிகள்:

  • பிச்சை எடுப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமானது மற்றும் 5,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
  • பிச்சை எடுப்பதற்கு ஏற்பாடு செய்தல் அல்லது பிச்சை எடுப்பதற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்தல் போன்ற நடத்தைகளுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம்.
  • அனுமதி இல்லாமல் நிதி திரட்டினால் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்:

  • நாட்டில் உள்ள 644 பல்பொருள் அங்காடிகள் 10,000 தயாரிப்புகளுக்கு 50%க்கும் அதிகமான தள்ளுபடிகளை அறிவித்தன.
  • லுலு ஹைப்பர் மார்க்கெட் 5,500 தயாரிப்புகளுக்கு 65% தள்ளுபடி வழங்குகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel