துபாய் முனிசிபாலிட்டி வரும் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது பூங்காக்கள் செயல்படும் நேரங்களை அறிவித்துள்ளது. முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பின்படி குடியிருப்பு பூங்காக்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பின்வரும் பூங்காக்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
- ஜபீல் பார்க்
- க்ரீக் பார்க்
- அல் மம்சார் பார்க்
- அல் சஃபா பார்க்
- முஷ்ரிஃப் பார்க்
சில்ட்ரென் சிட்டி (children’s city) வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் வெவ்வேறு செயல்பாட்டு நேரங்களைக் கொண்டிருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இது பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
அதே போல் குர்ஆன் பார்க் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். முன்னதாக, நகராட்சி, ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக நான்கு பொது கடற்கரைகளை ஒதுக்குவதாக அறிவித்தது. அத்துடன், மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்ளைக தவிர, அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களும் இலவசம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.